பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் நன்மைகள்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் நன்மைகள்

Home Loans Made Easy!

Home » Articles » பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் நன்மைகள்

“பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா என்பது வீடு கட்டுமானம் மட்டும் பற்றியதல்ல. இது ஏழைகளின் கனவுகளை நனவாக்கும் ஒரு உன்னதமான படிநிலையாகும்”

– Narendra Modi, Prime Minister

உணவு, உடை மற்றும் இல்லம் என்பன வாழ்வின் மிக முக்கிய அடிப்படை விஷயங்கள் என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ரியல் எஸ்டேட் விலைகள் அன்றாடம் உயர்ந்து வரும் வேளையில் மக்கள் பலர் மூன்றாவது அத்தியாவசியமான ‘பாதுகாப்பு’ என்பதற்கு விலை கொடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவேதான் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிஎம்ஏஒய் திட்டத்தை அறிவித்தது. இது சமூகத்தின் அனைத்து பிரிவினர்களுக்கும் மலிவான விலையில் வீடுகளை வழங்குகிறது.

மாண்புமிகு பிரதம மந்திரி நாடு 2022 ஆண்டில் தனது 75வது சுதந்திர விழாவை கொண்டாடும் வரை அனைவருக்கும் வீட்டு வசதியை வழங்குவார். இந்த குறிக்கோளை அடைய மத்திய அரசு பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – “அனைவருக்கும் வீடு (நகர்புறம்)” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் சேரிவாழ் மக்கள் உட்பட நகர்புற ஏழை மக்களின் இல்ல தேவைகளை பூர்த்தி செய்ய குறிக்கோள் கொண்டுள்ளது. இதில் பின்வரும் திட்டங்கள் அடங்கும்:

  1. இயல்பு சூழலில் சேரி மறுமேம்பாடு (ஐஎஸ்எஸ்ஆர்)
  2. கிரெடிட்-லிங்க்ட் மானிய திட்டம் (சிஎல்எஸ்எஸ்)
  3. பார்ட்னர்ஷிப்பின் மூலம் மலிவான வீடு (ஏஎச்பி)
  4. பயனாளியின் தனிநபர் வீட்டு கட்டுமானம்/அபிவிருத்தி (பிஎல்சி-என்/பிஎல்சி-இ)

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனாவின் நன்மைகள்:

நம்மனைவரின் கனவு ஒரு இல்லத்தின் உரிமையாளராதலே. அதுவொரு 1BHK வீடாகட்டும் அல்லது பங்களாவாகட்டும், வீடு என்பது ஒருவரின் மிக சிறந்த பொருளாதார பாதுகாப்பாகும். அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிழலும் மன நிம்மதியையும் குழந்தைகளுக்கு பொருளாதார எதிர்காலம் மற்றும் ரொக்கம் தேவையின் போது பல்வேறு கடன்களுக்கான செக்யூரிட்டி போன்ற பல நன்மைகளை தரும். சொத்துக்களின் விலை ராக்கெட் வேகத்தில் மேல்நோக்கி செல்லும் நேரத்தில் வீடு வாங்க கனவு கூட காண இயலாத சில சமூக பிரிவினர்கள் இருக்கின்றனர். பிரதம மந்திரி நரேந்திர மோடியை பொறுத்தவரை “பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா” என்பது ஏழை மக்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு உன்னதமான படிநிலையாகும். இந்த பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் நன்மைகளை பார்ப்போம்.

இது சேரி புணரமைப்பை குறிக்கோளாக கொண்டது:

பிஎம்ஏஒய் திட்டம் என்பது நாட்டையும் பொருளாதாரத்தையும் பல வழிகளில் உயர்த்தும் ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் யாதெனில் சேரி பகுதிகளில் குடிசைகளை அகற்றிவிட்டு அவற்றை “பக்கா” அல்லது கான்கிரீட் வீடுகளாக மாற்றுவது, குறிப்பாக இந்தியாவின் நகர்புற பகுதிகளில் ஏனெனில் நகர்புறங்கள் இந்தியாவின் ஜிடிபிக்கு முக்கிய பங்களிக்கின்றன. ஏழை பகுதிகளின் இந்த உட்புற புணரமைப்பு திட்டம் மூலம் அரசு சேரிவாழ் மக்கள் குடியிருப்பு அண்டைபுறங்களை விடுத்து முறையான நகர்புற குடியிருப்புகளை நாடவும் சுற்றுபுறத்தினால் மதிப்பு குறைந்த நிலத்தை பயன்படுத்தவும் ஊக்கப்படுத்துகிறது.

அனைவருக்கும் வீடு:

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனாவின் மிகப்பெரும் நன்மைகளில் ஒன்று யாதெனில் இது அனைவருக்கும் நிரந்தர வீட்டை வழங்க முற்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு 2 கோடி வீடுகள் வரை 1 BHK விலையில் இந்தியாவின் சில நன்கு அறியப்பட்ட நகர்புற பகுதிகளில் கட்ட விரும்புகிறது. வீடு கட்டுமானம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் வேறு நாடுகளிலும் வீடு கட்டுமானம் தொடங்கியுள்ளது. இந்திய அரசாங்கம் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் இந்த வீடுகள் மூலம் ஏழ்மையை ஒழிக்கவும் விரும்புகிறது.

அனைவருக்கும் மலிவான வீடு

இந்த பிஎம்ஏஒய் திட்டம் சமூகத்தின் அனைத்து தட்டு மக்களுக்கும் மலிவான வீடுகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நன்மை வீடற்ற சில வருமான மற்றும் சமூக பிரிவுகளை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும். விண்ணப்பதாரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். உதாரணமாக B. நலிந்த பொருளாதாரரீதியில் பின்தங்கிய சமூகத்தினர் (EWS), குறைந்த-வருமான பிரிவினர் (LIG) மற்றும் நடுத்தர-வருமான பிரிவினர் (MIG) என்று பிரிக்கப்படுகின்றனர். நடுத்தர-வருமான பிரிவினர் மேலும் MIG 1 மற்றும் MIG 2 என்று வருமான அளவுகளை பொறுத்து பிரிக்கப்படுகின்றனர். இது சிறுபான்மையினர்களான பட்டியல் சமூகத்தினர், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் திருநங்கை பிரிவினர்கள் போன்றோரை உள்ளடக்கும்.

வீடுகள் மானிய வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன:

பிஎம்ஏஒய் திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால் இது ஒரு கிரெடிட்-லிங்க்ட் மானிய திட்டம். நிதி நிறுவனங்களின் கடன் புழக்கத்தை அதிகரிக்க அரசு பிஎம்ஏஒய் திட்டத்தில் கடன்-தொடர்பான மானிய பாகத்தை உட்புகுத்தியது. இதன் மூலம் நகர்புற ஏழைகள் (EWS, LIG, MIG 1 மற்றும் MIG 2 உறுப்பினர்கள்) மிக குறைந்த வட்டி விகிதங்களில் வீடு வாங்கவோ கட்டவோ கடன் பெறும் தகுதியை பெறுகின்றனர். அத்தகைய கடன் பெறுபவர்கள் தாங்கள் செலுத்தும் வட்டியில் குறிப்பிட்ட அளவு சேமிக்க முடியும். உதாரணமாக மேற்கூறிய வருமான பிரிவை சேர்ந்தவர்கள் ஒரு வீட்டு கடனை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கான வட்டி விகிதம் 8.40% ஆகும். ரூ.600,000 வரையிலான கடன்களுக்கு அவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப மானியம் பெறுவார்கள். இந்த வட்டி மானியம் நிதி நிறுவனங்களால் முதலிலேயே பயனாளியின் கடன் கணக்கில் செலுத்தப்படுகிறது. எனவே மொத்தம் பெறவேண்டிய வீட்டு கடன் தொகை குறைகிறது மற்றும் ஒரு சமமாக்கப்பட்ட மாத தவணையும் (EMI) கிடைக்கிறது. யாரேனும் ரூ.600,000 க்கும் அதிக தொகையை தேர்ந்தெடுத்தால் அவர்கள் வாடிக்கையான வட்டி விகிதமாக ரூ._______ ஐ செலுத்த வேண்டும்.

இது பெண்களின் பொருளாதாரரீதியிலான எதிர்காலத்தை பாதுகாக்கிறது:

பிஎம்ஏஒய் இன் மற்றொரு முக்கிய நன்மை என்னவென்றால் இது பெண்களை கடனுக்கு விண்ணப்பித்து வீட்டு உரிமையாளர்களாக்க ஊக்கப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு மணமான ஆண் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர் தன் மனைவியையும் அவர் சொத்து வாங்குவதில் எந்த பங்கும் வகிக்கவில்லை என்றாலும் கூட அதில் இணைத்து கடன் விண்ணப்பதாரராக்க வேண்டும். இது பெண்களின் பொருளாதார எதிர்காலத்தை பாதுக்காக்கிறது, குறிப்பாக அவர்கள் வயது முதிர்ந்தவர்களாகவும் விதவைகளாகவும் ஆகும்போது.

சுற்றுசூழல் நட்பு வீட்டின் நன்மை

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டி தர பொறுப்பேற்கும் டெவலப்பர்களும் பில்டர்களும் சுற்றுசூழலுக்கு நட்பாக இருக்கும் கட்டுமான பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு வீடுகளை கட்டித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் நோக்கம் காற்று மற்றும் ஒலி மாசு மூலம் ஏற்படும் சேதம் உட்பட கட்டுமான இடத்தை சுற்றி ஏற்படும் சுற்றுசூழல் சேதத்தை கடுமையாக குறைப்பது. வீடுகள் ரீமாடலிங் அல்லது சீரமைக்கப்பட வேண்டிய தேவையை வெகு காலத்திற்கு தவிர்க்கும் விதத்தில் நீண்டகாலம் நீடித்திருக்கும், உயர்தர பொருட்களால் கட்டப்படுகின்றன.

இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.

Apply for a home loan

+91

Top Cities

* I declare that the information I have provided is accurate to the best of my knowledge. I hereby authorize Home First and their affiliates to call and/or send texts via SMS to me for promoting their products.