பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.வி)

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY): அனைவருக்கும் வீட்டுவசதி

Home Loans Made Easy!

Home » Articles » பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY): அனைவருக்கும் வீட்டுவசதி

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய் – PMAY) திட்டம் ஜூன் 25, 2015 அன்று செயலுக்கு வந்தது. இது அனைவருக்கும் வீடு என்ற திட்டமாகும். இந்த திட்டம் செயலாக்க அலுவலகங்களுக்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (UTக்கள்) மற்றும் மத்திய நோடல் ஏஜென்சிகள் மூலம் மத்திய உதவியை தகுதி பெறும் குடும்பம்/பெறுனருக்கு வீடு வழங்க வழங்குகிறது. 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்றும் அழைக்கப்படும் இந்த கிரெடிட்-லிங்க்ட் PMAY மானிய திட்டம் (சிஎல்எஸ்எஸ்-CLSS) குறிப்பிட்ட பொருளாதார எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கென 2 கோடி வீடுகளுக்கும் அதிகமாக வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. குடியிருப்பு சொத்து அல்லது நிலம் வாங்க அல்லது வீடுகள் கட்ட திட்டமிடும் தனிநபர்கள் கடன்கள் பெறும் போது கடன் தொகையின் மீது வட்டி மானியங்களுக்கு தகுதி பெறுவார்கள். இருந்தும் இந்த கடன் மானியம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் (EWS), குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினர் (LIG) அல்லது நடுத்தர-வருமானம் ஈட்டும் பிரிவினருக்கு (MIG) மட்டுமே வழங்கப்படும். PMAY சட்ட திட்டங்களின் படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் (EWS) வீட்டினளவு 30 சதுர மீட்டர் கார்பெட் ஏரியா வரை இருக்க வேண்டும். இருந்தும் மாநிலங்கள்/UTக்கள் அமைச்சகத்தின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் அடிப்படையில் வீடுகளின் அளவை அதிகப்படுத்தலாம்.

PMAYஇன் அம்சங்கள்

பின்வருபவை PMAYஇன் பிரதான அம்சங்கள்:

 1. மானியம் பெற இருபது ஆண்டு கடன் காலத்தை தேர்ந்தெடுத்தால் வட்டி மானிய அடிப்படையில் 6.50% ஆண்டுக்கு என்ற விகிதத்தில் கிடைக்கிறது. 
 2. இந்த வட்டி மானியம் நடுத்தர வருமானம் பிரிவினருக்கு (MIG) வீடு வாங்க/கட்ட (ரீபர்சேஸ் உட்பட) பெறும் வீட்டு கடன்களுக்கு வழங்கப்படுகிறது.
 3. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் (EWS)/ குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினர் (LIG) இந்த வட்டி விகித மானியம் வீடு கட்ட அல்லது வாங்க வழங்கப்படுகிறது. வசிக்கும் வீட்டில் அறைகள்/சமையலறை போன்றவை கட்டுவதற்கும் வீட்டு கடன் மானியம் கிடைக்கும்.
 4. இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய் – PMAY) திட்டத்தின் கீழ் 4041 அதிகாரபூர்வ நகரங்கள் உட்பட இந்தியாவின் அனைத்து நகர்புற பகுதிகள் பயன் பெறும். இவற்றில் 500 பிரிவு I நகரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 5. சுற்றுசூழல் நட்பு மற்றும் நிலையான தொழில்நுட்பங்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
 6. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தரை தளம் ஒதுக்கீடு விரும்பத்தக்கது.

PMAYஇன் நன்மைகள்

பின்வருபவை PMAYஇன் பிரதான நன்மைகள்:

 1. PMAY மானியம்: PMAYஇன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அதன் மானிய விகிதமாகும். வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக வங்கிகளில் 10% என்றிருக்கையில் PMAY திட்டத்தில் ஒருவருக்கு 6.5% மானியம் கிடைக்கிறது. இது மறைமுகமாக ஒருவர் கட்டும் மாத தவணை தொகைகளை குறைக்கிறது. இந்த PMAY மானியம் ஒரு பெரியளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக மத்திய-வருமான வகுப்பினரிடையே. மேலும் இதைப்பற்றி அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
 2. அனைவருக்கும் வீடு: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் அரசு மலிவான விலையில் நகர்புற பகுதிகள் முழுவதும் 2 கோடி வீடுகளை கட்டித்தரும். இந்த மலிவு விலை வீடுகள் கட்டுமானம் ஏற்கனவே மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு இன்னும் பிற மாநிலங்களில் தொடங்கி விட்டது.

இந்த திட்டம் கிராமப்புற பகுதிகளில் வசிப்போரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்திய அரசுக்கு உதவும் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும். 60% மக்கள் கிராமங்களில் வசிப்பதை கருத்தில் கொண்டால் இது ஒவ்வொருவரும் அத்தியாவசிய தேவைகளை பெற்று மகிழ ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

 1. தேச வளர்ச்சி: PMAY இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு நன்மையளிக்கும். இத்திட்டங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான பிரிவுகளுக்கு முன்னேற்றம் அளிப்பது மட்டுமல்லாமல் நாட்டின் நில பிரிவிற்கு மிகுந்த நன்மையளிக்கும். உதாரணமாக நிலம் சார்ந்த தொழில்துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
 2. மற்ற நன்மைகள்: குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவை சேர்ந்த பெண்கள் வீட்டு திட்டங்களை பெறுகையில் சிறப்பு நன்மைகளை பெறுவார்கள். விதவைகள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் சேர்க்கப்பட்டு அவர்களும் பலன் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் உடல் சௌகரியத்திற்கேற்ப தரை தளத்தில் அடுக்கக வீடு வாங்கிக்கொள்ளலாம்.

PMAYக்கான தகுதி நிபந்தனைகள்:

PMAY

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன் ஒருவர் மானியம் பெறும் தகுதி படைத்துள்ளாரா என கருத வேண்டும். பின்வரும் காரணிகள் PMAYக்கான தகுதியை தீர்மானிக்கின்றன.

 1. ஒருவரின் வருமானத்தின் வரையை பொறுத்து அவர் EWS, LIG அல்லது MIG பிரிவில் தகுதி பெறுவார். குடும்ப ஆண்டு வருமானமானது MIG பிரிவை தாண்டினால், அதாவது ரூ.18 லட்சம் என்பதை, அவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி பெறமாட்டார்கள்.
 2. ஒரு பெண்ணின் பெயர் வீட்டு பத்திரத்திலோ சொத்து ஆவணங்களிலோ இடம் பெற வேண்டும். இது முழு உரிமை அல்லது இணை உரிமையாக இருக்கலாம். முந்தையதில் வீட்டின் உரிமையாளர் பெண்ணாக இருப்பார். பிந்தையதில் உரிமையாளர்களில் ஒருவர் பெண்ணாக இருப்பார்.
 3. PMAY மானியம் புதிய வீடு/சொத்து வாங்க மட்டுமே வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர் இந்த கிரெடிட்-லிங்க்ட் திட்டத்தை பெறும் போது வேறெந்த பக்கா சொத்துக்களையும் கொண்டிருக்க கூடாது.
 4. பயனடைய விரும்புவோர் ஏதாவது மத்திய உதவியையோ மற்ற வீட்டு திட்ட நன்மைகளையோ மாநில அல்லது மத்திய அரசு மூலம் பெற்றுக்கொண்டிருப்பவராக இருக்க கூடாது.
 5. வாங்கும் வீடோ சொத்தோ மக்கள்தொகை கணக்கெடுப்ப்பு 2011 இன் படி பகுதிகள், நகரங்கள், கிராமங்கள் அல்லது மாநகரங்கள் குறைந்தபட்சம் ஒன்றில் இருக்க வேண்டும்.
 6. நன்மையடைவோர் PMAY கீழோ அல்லது ஏதாவது நிதி நிறுவனங்களிலிருந்து மற்ற கிரெடிட்-லிங்க்ட் மானிய திட்டத்தின் கீழோ நன்மைகளை பெற்றிருக்க கூடாது.
 7. வீட்டு கடன் பெறும் முதல் காரணம் வீடு புதுப்பித்தலோ விரிவாக்கமோ என்றால் இந்த வேலை முதன்மை கடன் தவணை பெற்ற 36 மாதங்களுக்குள் முழுமையடைய வேண்டும்.

PMAYக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது:

நீங்கள் பிஎம்ஏஒய் க்கு தகுதியிருந்து அதற்கு எவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பிப்பது என்று சிந்தனை செய்தால் பின்வரும் படிநிலைகளை வரிசை கிராமத்தில் பூர்த்தி செய்யவும்:

 • பிஎம்ஏஒய் க்கு நீங்கள் எந்த பிரிவின் கீழ் தகுதி பெறுகிறீர்கள் என்று தீர்மானியுங்கள்.
 • பின் http://pmaymis.gov.in/ என்ற வலைதளத்திற்கு வருகை தாருங்கள்
 • மெயின் மெனுவிலுள்ள ‘குடிமக்கள் மதிப்பீடு’ மீது கிளிக் செய்து விண்ணப்ப வகையை தேர்ந்தெடுங்கள்.
 • நீங்கள் வேறொரு பக்கத்திற்கு அழைத்து செல்ல படுவீர்கள். அங்கு உங்கள் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும்.
 • உங்கள் சுயவிவரங்கள், வருமானம், மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய வீட்டு முகவரி உட்பட அனைத்து விவரங்களை உள்ளிட்டு ஆன்லைன் பிஎம்ஏஒய் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
 • கேப்ச்சா குறியீட்டை உள்ளிடுங்கள், விவரங்களை சரிபாருங்கள் மற்றும் சமர்ப்பியுங்கள்.

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை பின்தொடர்ந்து டிராக் செய்ய ‘குடிமக்கள் மதிப்பீடு’ இன் கீழ் ‘உங்கள் மதிப்பீட்டு நிலையை டிராக் செய்யவும்’ ஐ கிளிக் செய்யுங்கள்.

PMAYக்கு ஆஃப்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது:

ஆன்லைன் வசதியை பயன்படுத்த இயலவில்லை என்றால் PMAY காகித-வடிவிலான விண்ணப்பத்தையும் ஏற்றுக்கொள்கிறது. மாநில அரசின் கீழ் இயங்கும் பொது சேவை மையத்திற்கு வருகை தந்து வெறும் ரூ.25 + GST தந்து ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். தனியார் மையங்கள் அல்லது வங்கிகளுக்கு காகித-வடிவ PMAY விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.

Apply for a home loan

+91

Top Cities

* I declare that the information I have provided is accurate to the best of my knowledge. I hereby authorize Home First and their affiliates to call and/or send texts via SMS to me for promoting their products.