பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா நகர்ப்புற: நகர்ப்புற (பிஎம்ஏஒய்-யூ)

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா நகர்புறம் (பிஎம்ஏஒய்-யூ): நகர்புற குடிமக்களுக்கு வீடு

Home Loans Made Easy!

Home » Articles » பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா நகர்புறம் (பிஎம்ஏஒய்-யூ): நகர்புற குடிமக்களுக்கு வீடு

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – அர்பன் (பிஎம்ஏஒய்-யூ) என்பது இந்திய அரசின் முன்னனி திட்டமாகும். இது வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது (MoHUA). இது சேரிவாழ் மக்கள் உட்பட நகர்புற EWS/LIG மற்றும் MIG பிரிவினர்களின் வீட்டு பற்றாக்குறையை தீர்க்க இலக்கு கொண்டுள்ளது. இது 2022க்குள், அதாவது தேசம் தனது 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் சமயத்தில் அனைத்து தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கும் ஒரு பக்கா வீட்டை வழங்க முடிவு செய்துள்ளது. பிஎம்ஏஒய்-யூ ஒரு தேவை-சார்ந்த அணுகுமுறையை கையாளுகிறது. அதாவது வீட்டு பற்றாக்குறை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பிடும் தேவையை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. மாநில அளவுகளில் நோடல் ஏஜென்சிகள் (SLNA), உள்ளூர் நகர்புற ஆணையங்கள் (ULB)/செயல்படுத்தும் ஏஜென்சிகள் (IA), மத்திய நோடல் ஏஜென்சிகள் (CNA) மற்றும் முதன்மை கடனுதவி வழங்கும் நிறுவனங்கள் (PLI) ஆகியோர் இதன் செயல்படுத்தல் மற்றும் வெற்றிக்காக உழைக்கும் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.

இத்திட்டம் ஒட்டுமொத்த மாநகர பரப்பளவையும் உட்படுத்துகிறது அதாவது அதிகாரபூர்வ நகரங்கள், அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதிகள், அபிவிருத்தி ஆணையங்கள், சிறப்பு பகுதி அபிவிருத்தி ஆணையங்கள், தொழிற்சாலை அபிவிருத்தி ஆணையங்கள் அல்லது மாநகர ஒழுங்கு மற்றும் வழிகாட்டல்களை சார்ந்துள்ள மாநிலத்தின் கீழுள்ள அத்தகைய வேறெதேனும் ஆணையம் போன்றவை.

பிஎம்ஏஒய் (யூ) இன் கீழ் வரும் அனைத்து வீடுகளும் அடிப்படை வசதிகளான கழிவறை, நீர் விநியோகம், மின்சாரம் மற்றும் சமையலறை போன்றவற்றை கொண்டிருக்கும். இந்த திட்டம் பெண்களை சொத்தின் உரிமையாளராகவோ இணை-உரிமையாளராகவோ சேர்த்து அவர்களுக்கு வீட்டில் பொறுப்பும் சம அந்தஸ்தும் வழங்குவதன் மூலம் பெண்கள் அதிகாரத்தை ஊக்குவிக்கிறது. இது மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், SC, ST, OBC, மைனாரிட்டி, சிங்கிள் லேடீஸ், திருநங்கைகள் மற்றும் வேறுபல நலிவடைந்த பிரிவை சார்ந்தவர்களுக்கு விசேஷ கவனமளிக்கிறது. பிஎம்ஏஒய் (யூ) வீடு நல்ல கௌரவமான குடித்தனத்தை அமைத்து வழங்குகிறது மற்றும் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற பெருமையை சேர்க்கிறது.

பிஎமஏஒய் (யூ) புவியியல், நிலவமைப்பு, பொருளாதார சிக்கல்கள், நிலத்தின் அணுகல், மற்றும் கட்டமைப்பு இவற்றை சார்ந்த ஒரு தனித்துவமான அணுகுமுறையை கடைபிடிக்கிறது. இத்திட்டம் பின்வருமாறு நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இயல்பு சூழல் சேரி மறுஅபிவிருத்தி (ISSR)

ISSR பிரிவின் கீழ் தகுதி பெறும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1 லட்சம் வரையிலான மத்திய உதவி கிடைக்கபெறும். இதில் நிலம் ஒரு வளமாக பயன்படுத்தப்படும் மற்றும் தனியார்துறை பொறியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மறுஅபிவிருத்திக்கு பின் சேரிகள் ஒழிப்பு மாநில/UT அரசுகளால் அறிவிக்கப்படுவதை இத்திட்டத்தின் விதிகள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மற்ற சேரிகளும் அபிவிருத்தி செய்யப்பட மாநிலங்கள்/நகரங்களுக்கு மத்திய உதவி சென்று சேர்த்திடும் வகையில் இத்திட்டம் நெகிழ்தன்மையை கொண்டுள்ளது. திட்டங்கள் நியாயமான பொருளாதார வகையில் சாத்தியப்பட மாநிலங்கள்/நகரங்கள் FSI/FAR அல்லது TDR ஐ வழங்கும். தனியார் நிலங்களில் உள்ள சேரிகளுக்கு மாநிலங்கள்/நகரங்கள் உரிமையாளர்களுக்கு இடவமைப்பை பொறுத்து கூடுதல் FSI/FAR அல்லது TDR ஐ வழங்கும். இதில் மத்திய உதவி கிடைக்கப்பெறாது.

கிரெடிட்-லிங்க்ட் மானிய திட்டம் (CLSS)

வங்கிகள், வீட்டு கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் அத்தகைய வேறு அமைப்புகளிலிருந்து வீட்டு கடனுதவி பெற விரும்பும் பொருளாதார ரீதியிலான பின்தங்கிய பிரிவு (EWS)/குறைந்த-வருமானம் கொண்ட பிரிவு (LIG), நடுத்தர வருமானம் கொண்ட பிரிவு (MIG) – I மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பிரிவு (MIG) – II இவற்றை சேர்ந்த பயனாளிகள் வீடு வாங்க, சொந்த நிலத்தில் வீட கட்ட அல்லது சொந்த வீட்டை அபிவிருத்தி செய்ய வீட்டு கடன்களை நாடுபவர்கள் முன்னுரிமை அடிப்படையில் 6.5%, 4% மற்றும் 3% வரை ரூ.6 லட்சம், ரூ.9 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் முன் பண தொகையின் மீது மானியத்திற்கு தனித்தனியாக தகுதி பெறுவார்கள். இந்த மானியத்தை பயனர்களுக்கு வழங்கும்   அமைப்புகளாகவும் முன்னேற்றத்தை கண்காணிக்கும் அமைப்பாகவும் செயல்பட அமைச்சகமானது வீட்டு வசதி மற்றும் நகர்புற அபிவிருத்தி கழகம் (HUDCO), தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவற்றை மத்திய நோடல் எஜென்சிகளாக நியமித்துள்ளது. MIG வகையீட்டிற்கான திட்டம் 31 மார்ச் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது

CLAP நுழைவாயில் CLSS பிரிவின் திட்ட சுழற்சிகளை தடையின்றி நிறைவேற்ற பெரும்பங்கு அளித்துள்ளது. இது அமைச்சகத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கையை குறைக்க ஊக்கப்படுத்துகிறது.

கூட்டாண்மையில் மலிவான வீட்டு வசதி

AHP இன் கீழ் ரூ.1.5 லட்சம் மத்திய உதவி ஒவ்வொரு EWS வீட்டிற்கும் அரசு கிடைக்கும். ஒரு நியாயமான வீட்டு திட்டம் என்பது பல்வேறு பிரிவுகளுக்கான வீடுகளின் ஒரு கலவையாக இருக்கலாம். இருந்தும் திட்டத்தில் குறைந்தது 35% EWS வகையின் கீழ் அமைந்திருந்தால் இதற்கு மத்திய உதவி கிடைக்கும். மாநிலங்கள்/UTக்கள் EWS வீடுகளுக்கான ஒப்பந்த விலைக்கான உச்ச வரம்பை விதித்துள்ளது. இது வீடுகளின் விலையை நியாயமாக வைத்திடவும் பயனர்களுக்கு கிடைக்கப்பெறவும் உதவுகிறது. மாநில மற்றும் நகர்புற சமூகங்கள் கூடுதலாக சலுகைகளை பெறுகின்றனர். உதாரணமாக மாநில பங்கு, நியாயமான விலையில் நிலம், முத்திரை தாள் விதிவிலக்கு, போன்றவை.

பயனர்-சார்ந்த தனிநபர் வீடு கட்டுமானம்/அபிவிருத்தி (BLC-N/BLC-E):

EWS வகையீட்டின் தேவைகளை கொண்ட நிலம் படைத்த தகுதிபெறும் குடும்பங்களுக்கு ஒரேயொரு வீடு கட்ட/மேம்படுத்த மத்திய உதவி ரூ.1.5 லட்சம் வரை ஒவ்வொரு EWS வீட்டிற்கும் கிடைக்கிறது. நகர்புற உள்ளூர் அமைப்புகள் பயனர் சமர்பிக்கும் இந்த தகவலையும் பில்டிங் பிளானையும் ஒப்புதல் செய்கின்றனர். இதன் இலக்கு என்னவென்றால் பயனர்களின் தகுதி மற்றும் பொருளாதார நிலையை தீர்மானிப்பதாகும். விசேஷ உதவி மற்றும் சாத்தியமான மாநில/UT/ULB பங்கும் பயனர்களின் நிதி கணக்கில் நேரடி மானிய மாற்றம் (DBT) மூலம் மாநிலங்கள்/UTக்கள் பட்டுவாடா செய்கின்றன.

இந்தியாவிலுள்ள பிஎம்ஏஒய்-யூ யூனிட்டுகளுக்கான தேவை காரணிகள்

பிஎம்ஏஒய் அனைத்து முந்தைய நகர்புற வீட்டு திட்டங்களை விட அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. ஏனெனில் நகர்புறத்தில் 20 மில்லியன் வீடுகள் பற்றாக்குறை உள்ளது. இதை இத்திட்டம் 2022ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்ய முனைகிறது. இதுநாள் வரை 4,427 நகர்புற பகுதிகள்/நகரங்கள் இந்த பிஎம்ஏஒய்-யூ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. வீட்டு வசதியில் ஆர்வம் சமீபத்திய தசாப்தத்தில் வளர்ந்துள்ளது. இதன் காரணிகள் நேர்மறை சமூக பொருளாதாரங்கள், வளர்ந்து வரும் நகர்புறம், பொருளாதார வளர்ச்சி, ஊதிய அளவுகளில் வளர்ச்சி, குடும்ப யூனிட்டுகளில் வளர்ச்சி, முதல்-முறை வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் மற்றும் சுலபமாக அணுகக்கூடிய வீட்டு கடன்கள் போன்றவை.

பிஎம்ஏஒய்-யூ க்கு தேவைப்படும் ஆவணங்கள்

நீங்கள் ஆன்லைனிலோ ஆப்லைனிலோ இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தால் பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருப்பது உதவிகரமாக இருக்கும்.

  • அடையாள சான்று (ஆதார் அட்டை, பான் அட்டை, குடிமக்களின் ஐடி)
  • முகவரி சான்று
  • வருமான சான்று (படிவம் 16, நிதி இருப்பு அறிக்கை, மிக சமீபத்திய வருமானம் வரி தாக்கல்)
  • வாங்கும் சொத்துக்கான மதிப்பீட்டு ஒப்புதல்.
  • நீங்கள் அல்லது உங்கள் உறவினர் இந்தியாவில் எந்த பகுதியிலும் ஒரு பக்கா வீடு என்று அழைக்கப்படும் எந்தவொரு வீட்டையும் கோரவில்லை என்பதை தெரிவிக்கும் ஒரு ஒப்பந்தம்.
  • பில்டருடன் கட்டிட வளர்ச்சி ஒப்பந்தம்
  • கட்டிட வளர்ச்சிக்கான ஒப்புதல் திட்டம்.
  • உரிய ஆணையம் அல்லது வீட்டுவசதி சொசைட்டியிலிருந்து தடையற்ற சான்றிதழ்
  • சொத்தின் வகை மற்றும் நிபந்தனைகளை உறுதிப்படுத்தும் அறிக்கை.
  • சொத்து ஒதுக்கீட்டு கடிதம்.
  • பொருந்தினால், சொத்து வாங்குவதற்காக செய்யப்பட்ட முன்பண தவணை ரசீது.
  • தேவைப்பட்டால் வேறு சில சொத்து ஆவணங்கள்.

பிஎம்ஏஒய்-யூ திட்டத்திற்கான முக்கிய தடைகற்கள்

  • பெருநகர பகுதிகளில் நிலத்திற்கான குறைந்தளவு அணுகல்.
  • அதிக யூனிட் செலவு, குறிப்பாக மும்பை பெருநகர மண்டலம் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில்.
  • தனியார் டெவலப்பர்களின் குறைந்த ஒத்துழைப்பு.
  • மூல பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
  • செயல்பாட்டு சிக்கல்கள், உதாரணமாக நிலையான வருமானம், உரிய ஆவண சான்றுகள் இல்லாததால் வங்கிகள்/நிதி நிறுவனங்கள் ஏழை மக்களுக்கு கடனுதவி வழங்குவதில் கடினம்.

இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.

Apply for a home loan

+91

Top Cities

* I declare that the information I have provided is accurate to the best of my knowledge. I hereby authorize Home First and their affiliates to call and/or send texts via SMS to me for promoting their products.