உங்கள் வீட்டு கடன் மானியத்தை பிஎம்ஏஒய் மானிய கால்குலேட்டருடன் கணக்கிடுங்கள்

பிஎம்ஏஒய் மானிய கால்குலேட்டர்: உங்கள் வீட்டு கடன் மானியத்தை கணக்கிடுங்கள்

Home Loans Made Easy!

Home » Articles » பிஎம்ஏஒய் மானிய கால்குலேட்டர்: உங்கள் வீட்டு கடன் மானியத்தை கணக்கிடுங்கள்

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) திட்டம் 25 ஜூன் 2015 இல் அமலுக்கு வந்தது. இது அனைவருக்கும் வீடு தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டம் மாநில/யூனியன் பிரதேசங்கள் (UTக்கள்) மற்றும் மத்திய நோடல் ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்தும் அலுவலகங்களுக்கு மத்திய உதவியை வழங்கி அனைவருக்கும் மற்றும் ஒவ்வொரு தகுதி பெறும் குடும்பம்/பயனருக்கு வீட்டை வழங்க திட்டமிட்டுள்ளது. ‘2022 க்குள் அனைவருக்கும் வீடு’ என்றும் அழைக்கப்படும் இத்திட்டம் ஒரு கிரெடிட்-லிங்க்ட் பிஎம்ஏஒய் மானிய திட்டமாகும் (CLSS). இது குறிப்பிட்ட பொருளாதார பிரிவுகளை சார்ந்த இந்தியர்களுக்கு 2 கோடி வீடுகளை கட்டித்தர திட்டமிட்டுள்ளது.

குடியிருப்பு சொத்து அல்லது நிலம் வாங்க அல்லது வீடு கட்ட கடனுதவி வாங்க விரும்பும் தனிநபர்கள் அத்தகைய கடன் மீது வட்டி மானியம் பெற தகுதி பெறுவார்கள். இருந்தும் இந்த கடன் மானியம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் (EWS), குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் (LIG) அல்லது நடுத்தர-வருமானம் பிரிவினர் (MIG) ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. பிஎம்ஏஒய் விதிகளின் படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினர் (EWS) வீட்டின் அளவு குறைந்தபட்சம் 30 ச.மீ. இருக்க வேண்டும். ஆனாலும் அமைச்சகத்தின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் மாநிலங்கள்/UTக்கள் வீடுகளின் அளவை அதிகரிக்கும் நெகிழ்தன்மையை படைத்துள்ளன.

பிஎம்ஏஒய் மானிய கால்குலேட்டர் என்றால் என்ன?

வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் தனிநபர்கள் மானிய விகிதத்தில் கிடைக்கும் பிஎம்ஏஒய் திட்டத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டும். பிஎம்ஏஒய் கால்குலேட்டர் கடன் பெறுபவரின் கடனடைக்க கட்ட வேண்டிய மாத EMI ஐ கணக்கிட உதவுகிறது. இந்த கால்குலேட்டர் மற்ற வீட்டு கடன் EMI கால்குலேட்டர் போன்றே செயல்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அசல் கடன் தொகை, வட்டி விகிதம், மற்றும் கடன் காலம் இவற்றை உள்ளிடுவதுதான். உடன் உங்கள் மாத EMI தொகை தெரிய வரும். அதிகபட்ச கடன் காலம் 20 ஆண்டுகள். அரசு மூன்றில் ஒரு பங்கு அளிக்கிறது – பிஎம்ஏஒய் விண்ணப்பிப்பவர்கள் பிரிவை பொறுத்து கடன் மீது 6.5% வட்டி மானியம் கிடைக்கும். அதாவது:

  • பொருளாதார ரீதியிலான பின்தங்கியவர்கள் (EWS)
  • குறைந்த-வருமானம் கொண்டவர்கள் (LIG)
  • நடுத்தர வருமானம் கொண்டவர்கள் (MIG) 1 & 2

பிஎம்ஏஒய் ஐ பாதிக்கும் காரணிகள்

  • ஆண்டு குடும்ப வருமானம்: ஆண்டு குடும்ப வருமானம் அதிகரிக்க அதிகரிக்க மானிய தொகையும் அதிகரிக்கும். இதன் தலைகீழும் பொருந்தும்.
  • கடன் காலம்: கடன் காலம் அதிகரிக்க அதிகரிக்க மானிய தொகையும் அதிகரிக்கும்.
  • கடன் தொகை: கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க மானிய தொகையும் அதிகரிக்கும்.

பிஎம்ஏஒய் கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா கால்குலேட்டரை பயன்படுத்துவது எளிது. எனவே முடிவுகள் உடனடியாக தெரிய வருகின்றன.

படிநிலை 1: பெட்டியில் ஆண்டு குடும்ப வருமானத்தை அமைக்கவும்

படிநிலை 2: கடன் காலத்தை தெரிவு செய்யவும். இதை நீங்கள் உகந்த விருப்பத்தேர்வை பொறுத்து மாதங்கள் அல்லது வருடங்களில் குறிப்பிட வேண்டும்.

படிநிலை 3: இறுதியாக தேவைப்படும் கடன் தொகையை குறிப்பிடவும்.

படிநிலை 4: மானிய தொகை மற்றும் மானிய வகை கணக்கிடப்பட்டு நீங்கள் பல்வேறு ஸ்லைடர்களை தாண்டி முன்னேறுகையில் உடனடியாக காண்பிக்கப்படும்.

இந்த மானிய தொகையால் கடன் தொகை மற்றும் வட்டி சுமை குறைகிறது. இப்போது நாம் வட்டி மானிய தொகையை கணக்கிடுவோம் மற்றும் அது எவ்வாறு ஒருவர் கடனுக்கு பொருத்தப்படுகிறது என்று பார்ப்போம்.

உதாரணம்:

ரூ.6 லட்சம் வரை வருமானம் உள்ள ஒருவரைக் எடுத்துக்கொள்வோம்:

அதிகபட்ச மானியக் கடன்: 6 லட்சம்

மானியம்: 6.5 சதவீதம்

அசல் கடன் தொகை: ரூ .6 லட்சம்

வட்டி விகிதம்: 9%

EMI: ரூ .5,398

மொத்த வட்டி செலவு (20 ஆண்டுகளுக்கானது): ரூ.6.95 லட்சம்

6.5% மானியத்தில், வட்டி மானியத் தொகையின் NPV ரூ.2,67,000 ஆகும்.

இந்த வட்டி மானியத் தொகையைத்தான் கடன் பெறுபவர்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே ரூ.6 லட்சம் கடன் என்பதை விட, மாற்றியமைக்கப்பட்ட கடன் தொகை ரூ.3,33,000 ஆகும். இருந்தும் கடன் வாங்குபவர் ஆண்டொருமுறை 9 சதவீத வட்டியை செலுத்தி கடனை அடைத்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் வட்டி மானியத் தொகை கடன் பெறுபவர்களுக்கு முன்னரே பட்டுவாடா செய்யப்பட்டு விடும். கூடுதல் நன்மைகள்: குறைக்கப்பட்ட EMI மற்றும் குறைந்த வட்டி சுமை.

மாற்றியமைக்கப்பட்ட கடன் தொகை: ரூ.3.33 லட்சம்

வட்டி விகிதம்: 9 சதவீதம்

EMI: ரூ.2996

மொத்த வட்டி செலவு (20 ஆண்டுகளுக்கானது): ரூ .3.86 லட்சம்

EMI இல் நிகர குறைப்பு: ரூ.2,402

வட்டியில் நிகர சேமிப்பு: ரூ.3, 08,939

எவ்வாறு குறை-வருமானம் மற்றும் நடுத்தர-வருமானம் வகைப்படுத்தப்படுகிறது?

  • உங்கள் ஆண்டு வருமானம் ரூ.600,000 க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் என்று வகைப்படுத்தப்படுவீர்கள், அதாவது குறை-வருமான பிரிவு என்று. இதற்கான மானியம் சுமார் ரூ.2.67 லட்சம்.
  • நடுத்தர-வருமான பிரிவுகள் (MIGக்கள் – I) என்பது ஆண்டொன்றுக்கு ரூ.600,000 லட்சம் முதல் ரூ.11,99,99 வரை ஈட்டும் மக்களை குறிக்கும். இவர்கள் பிஎம்ஏஒய் கீழ் தங்கள் வீட்டு கடன் மீது ரூ.2.30 லட்சம் வரை சேமிக்க முடியும்.

மற்ற நிபந்தனைகள்

  • வருமான நிபந்தனை தவிர பயனர் குடும்பத்திற்கு பக்கா வீடு சொந்தமாக அவர்/அவள் பெயரிலோ அல்லது அவர்/அவள் குடும்ப உறுப்பினர் பெயரிலோ இந்தியாவின் எந்த பகுதியிலும் இருத்தல் கூடாது.
  • பெண்கள் ஓனர்ஷிப்/இணை-ஓனர்ஷிப் – EWS/LIG க்கு – பெண்கள் ஓனர்ஷிப் புதிய வீடு வாங்குவதற்கு மட்டுமே கட்டாயமாகும், தனக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டுமானம் அல்லது வீடு விரிவாக்கம்/மேம்பாடு/செப்பனிடல் போன்றவற்றிற்கு கட்டாயமில்லை. MIG I & II க்கு கட்டாயமில்லை.
  • நீங்கள் திருமணமானவர் மற்றும் பிஎம்ஏஒய் நன்மையை பெற விரும்பினால் நீங்களோ அல்லது உங்கள் வாழ்க்கை துணையோ தனித்தனியாக/இணைந்து விண்ணப்பிக்கலாம்.
  • தம்பதியாக உங்களுக்கு வரும் ஊதியம் ஒரு யூனிட்டாக கருதப்படும். ஆனாலும் குடும்பத்தில் மற்றொரு ஊதியம் ஈட்டும் வயது வந்தவர்கள் இருந்தால் திருமணம் ஆகியோ ஆகாவிட்டாலோ கூட அவர்/அவள் ஒரு தனி குடும்பமாக கருதப்படுவார்.
  • உங்கள் மொத்த குடும்ப வருமானத்தை பற்றிய ஒரு சுய-அறிக்கையையும் சொத்து பற்றிய ஆவணங்களையும் உங்கள் கடன் நிறுவனத்திற்கு நீங்கள் சமர்பிக்க வேண்டும்.
  • பிஎம்ஏஒய் இன் கீழ் அனைத்து கடன் கணக்குகளும் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.

Let us lend you helping hand in making your dream come true.

Apply for a Home Loan online
& get instant approval

Interest rates and other charges depend on the products. Please refer to the individual product pages for the rates.

Your home loan will be processed in 2 steps:

  1. You receive the approval of your home loan.
  2. You sign the loan agreement papers and complete other necessary documentation. The loan amount is thereafter paid directly to the builder by Home First Finance Company.

Loan decisions are made in less than a week. You will receive an SMS on your registered mobile number as soon as we make a decision.

HomeFirst does not charge any prepayment fees. This applies to both partial and full repayments. In fact, we have a special Auto-Prepay feature to facilitate this process for you.

HomeFirst offers loan tenures between 1 year to 25 years. If you opt for a longer tenure, you can get the advantage of a lower EMI each month.

HomeFirst can provide finance up to 90% of the property value. The balance has to be arranged by you from other sources. Please note: 90% financing is only available for loans amounting to less than Rs. 30 lakhs.

All co-owners of the property have to be co-applicants to the loan. A person who is not a co-owner can also become a co-applicant to the loan.

During the construction phase, HomeFirst will disburse funds to the builder on your behalf. These will be based on payment requests made by the builder as per the construction schedule.

HomeFirst will charge interest only on the amount disbursed as loan during the construction phase. In this period, interest is charged only on the disbursed loan amount. For example, if you have a sanctioned loan of Rs 10 lakhs, but the property is under construction and we have disbursed only Rs 4 lakhs, you will be charged interest only on 4 lakhs. These interest payments are referred to as pre-EMI interest payments.

EMI payments will start only after completion of the project and registration of the property.

All cheques to HomeFirst should be written out in favor of ‘Home First Finance Company India Limited’.

In the event of an unfortunate incident, home loan insurance will help you or your family pay off the home loan. This ensures that the burden does not suddenly fall upon family members at a bad time.

Send us your resume on careers@homefirstindia.com with the position you are applying for in the subject line.