வீடு கட்டுமான கடன் பற்றி யோசிக்கிறீர்களா? இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
•
நீங்கள் எப்பொழுதாவது இன்டோர் நீச்சல்குளம் மற்றும் மல்டி-கார் கேரேஜ்கள் கொண்ட வீட்டை வாங்குவது பற்றி கனவு காண்கிறீர்களா? நீங்கள் எப்பொழுதாவது ஒரு வீட்டை கட்டுவதை பற்றியோ இருக்கும் வீட்டில் ஒரு அறையை கூடுதலாக கட்டுவதை பற்றியோ யோசித்திருக்கிறீர்களா? நல்லது, உங்களால் அக்கனவை நனவாக்க முடியும் ஏனெனில் வீடு கட்டுமானத்தில் இருக்கையிலே கூட வங்கிகள் இப்போது கட்டுமான செலவுகளை எதிர்கொள்ள குறுகியகால கடன்களை வழங்குகின்றன. வீடு கட்டுவது என்பது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்கும் அதே வேளையில் மிக்க பொருள் தேவைப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. மக்களில் பலர் வீடுகட்டும் செலவை தாங்கும் ஆற்றல் பெற்றிருப்பதில்லை. இந்த பிரச்சினையை இலகுவாக்க பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நிதிசார்ந்த உதவியை வீட்டு கடன் வடிவில் வழங்குகின்றன.
வீடு கட்டுமான கடன் என்றால் என்ன?
வீடு கட்டுமான கடன் என்பது ஒரு குறுகியகால கடன். இது ஒரு கட்டிடத்தை கட்ட தேவையான பொருளுதவியை தருகிறது. இதுவொரு வகையான வீட்டு கடன். இதில் நீங்கள் ஒரு வீட்டை வாங்குவதற்கு பதில் ஒரு வீட்டை கட்ட கடன் பெறுகிறீர்கள். கட்டுமான வேலை முன்னேறி கொண்டிருக்கையில் கடன் நிறுவனம் தவணைகளில் தொகையை பட்டுவாடா செய்கிறார். ஒரு வீட்டு கட்டுமான கடனுக்கு விண்ணபிக்க விரும்பினால் நீங்கள் ஒரு விரிவான வீட்டு கட்டுமான கடன் நடைமுறை பட்ஜெட் ப்ளானையும் சமர்பிக்க வேண்டும்.
நிரந்தர வீடாக கட்டுதல்: உங்களிடம் சாத்தியமான கட்டுமான திட்டங்களும் விரிவான கட்டுமான நிரலும் இருந்தால் இத்தகைய கடன்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இதில் கட்டுமான பணி முடிய முடிய வங்கியானது பில்டருக்கு தொகையை செலுத்திக்கொண்டு வரும். பின் அந்த செலவு ஒரு வீட்டு கடனாக இறுதியில் வடிவெடுக்கும். இத்தகைய கடன்கள் உங்களை வட்டி விகிதத்தை இறுதியில் லாக் செய்ய அனுமதிக்கும். எனவே உங்கள் தவணைகள் சீராக அமையும்.
பிரத்தியேக கட்டுமான கடன்கள்: இக்கடன்கள் புராஜெக்ட் முடிவடைந்த பின் வழங்கப்படுகிறது. உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது அல்லது பழைய வீட்டை விற்ற தொகையை கொண்டு இந்த புதிய வீட்டை உருவாக்க முடியுமென்றால் இந்த லோன் உங்களுக்கேற்ற ஒன்றுதான். இதில் செலவை எதிர்கொள்ள அடமானம் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்களே ஒரு கடன் நிறுவனத்தை தேடி இரண்டாம் முறையாக கடனுக்கான ஒப்புதல் பெறவேண்டும்.
சீரமைப்பு கட்டுமான கடன்: இந்த வகை கடன் மற்ற இரண்டு கடன்களை விட சற்று வித்தியாசமானது. சீரமைப்பு கட்டுமான கடன் என்பது நீங்களிருக்கும் வீட்டை புதுப்பிக்கவோ மேம்படுத்தவோ விரும்பினால் இதை பயன்படுத்தலாம். இதில் வாங்கும் விலையுடன் கூடிய புதுப்பிப்பின் செலவை வீட்டு கடனை கொண்டு எதிர்கொள்ளலாம்.
வீடு கட்டுமான கடன் முக்கிய நன்மைகள்:
முக்கிய நன்மைகள் பின்வருமாறு:
இது மிக வசதியான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
30 ஆண்டுகள் வரையிலான கடன் காலம்.
விரைவான ஒப்புதல் காலம்
உயர்ந்த கடனுக்கான மதிப்பு அதாவது கட்டுமான எஸ்டிமேட்டின் 100% அல்லது சொத்து மதிப்பின் 90%, இதில் எது குறைவோ அது.
தேவையான ஆவணங்கள்:
வீட்டு கட்டுமான கடனுக்காக தேவைப்படும் முக்கிய ஆவணங்களின் பட்டியல்:
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முறையாக பூர்த்தியான விண்ணப்ப படிவம்.
- வயது சான்று
- முகவரி சான்று
- வருமான சான்று அல்லது வங்கி அறிக்கை
- சொத்து அல்லது நிலம் தொடர்பான ஆவணங்கள்
- கட்டுமான செலவின் எஸ்டிமேட்.
வீட்டு கட்டுமான கடனுக்கு விண்ணப்பியுங்கள்:
வீட்டு கட்டுமான கடன் வழிமுறை வீட்டு கடனை போன்றேதான். உங்களால் இயலக்கூடிய மாத தவணைகளை கணக்கிட எப்பொழுதும் வீட்டு கடன் EMI கால்குலேட்டரை பயன்படுத்துங்கள். ஹோம் ஃபர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி உங்கள் கனவு இல்லத்தை மலிவான வட்டி விகிதத்தில் கட்ட உதவுகிறது.
ஹோம்ஃபர்ஸ்ட்டில் நீங்கள் ஆன்லைனில் வீட்டு கட்டுமான கடனுக்கு பின்வரும் ஒருசில படிநிலைகளில் விண்ணப்பிக்கலாம்:
ஹோம்ஃபர்ஸ்ட் வலைத்தளத்திலுள்ள வீடு கட்டுமான கடன் பக்கத்திற்கு வருகை தாருங்கள்.
இப்போதே விண்ணப்பிக்கவும் படிவத்தில் அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு பூர்த்திசெய்யவும்.
ஒரு பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார் மற்றும் விண்ணப்ப வழிமுறையை எளிதாக்க உங்கள் வீட்டிற்கே வந்து ஆவணங்களை பெற்றுக்கொள்கிறோம்.
வீட்டு கட்டுமான கடனுக்கு விண்ணப்பிக்கு முன் கடன் பெற தேவைப்படும் அனைத்து ஆவணங்களை சரிபாருங்கள். இது பிந்தைய கட்டத்தில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கிறது. உங்கள் சொந்த மனையில் வீடு கட்டுகிறீர்களா? அல்லது மேலும் ஒரு தளத்தை அமைக்கிறீர்களா? காரணம் என்னவாக இருந்தாலும் உங்கள் அழகான வீட்டிற்கு மேலும் அழகூட்ட ஹோம்ஃபர்ஸ்ட் உங்களுக்கு ஒரு கடனை வழங்குகிறது.
இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.