வீட்டு கடன் தகுதி: உங்கள் வீட்டு கடன் தகுதியை அதிகரிக்கும் உதவி குறிப்புகள்
•
நீங்கள் ஒரு வீட்டு கடனை பெறும் அளவிற்கு தகுதி படைத்தவரா? விண்ணப்பிக்கும் முன் இக்கேள்விக்கு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரிடமும் பதில் இருக்காது. கடன் பெறுவதோ கடன் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் பெறுவதோ சுலபமல்ல. ஏனெனில் பெறப்படும் கடனை பற்றிய முழு புரிதலும் ஆராய்ச்சியும் தேவை. எனவே வீட்டு கடன் விண்ணப்பத்திற்கு முன் உங்கள் தகுதியை பற்றி கண்டறிந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
வீட்டு கடன் தகுதி என்றால் என்ன?
வீட்டு கடன் தகுதி என்பது ஒரு வீட்டை உரிமையாக்கி கொள்ள நீங்கள் எத்தனை கடன் தொகையை பெறுவீர்கள் மற்றும் ஒரு கடனுக்கு தகுதி பெறுவீர்களா இல்லையா என்பதை குறிக்கும் ஒரு சொற்றொடர். உங்கள் வீட்டு கடன் தகுதியை நிர்ணயிக்க சில காரணிகளை கருத வேண்டும். அதாவது உங்கள் வயது, வருமானம், வேலை மற்றும் சொத்தின் வகை, கிரெடிட் ஸ்கோர் மற்றும் பல.
வீட்டுக் கடன் தகுதியைக் கணக்கிடுங்கள்
வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர்
வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர் என்பது ஒரு வலைத்தள கருவியாகும். இது உங்களுக்கு கிடைக்கபெறும் உச்சவரம்பு கடனை காண்பிக்கும். வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் கடன் உச்சவரம்பு தகுதியை தீர்மானித்துக் கொள்வது விண்ணப்பத்திற்கு ஒப்புதல் பெறும் வாய்ப்பை அதிகரிக்கிறது. வருமானம் மற்றும் ரீபேமென்ட் ஆற்றலின் அடிப்படையில் இந்த கால்குலேட்டர் உடனடி தகவல்களை வழங்குகிறது. இதற்கு நிலையான மாத செலவுகள், வயது போன்ற விவரங்கள் தேவை. ஒரு கடன் கோரிக்கைக்கு ஒப்புமுன் கடன் நிறுவனங்கள் வேறு பல அம்சங்களையும் கருதுகின்றன. அவையாவன கிரெடிட் ஸ்கோர், பொருளாதார நிலை, இன்னும் பிற.
உங்கள் வீட்டு கடன் தகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
வங்கிகள் உங்களால் திரும்ப செலுத்த இயலும் தொகையைதான் உங்களுக்கு கடனாக வழங்கும். உங்கள் கடன் தகுதியை முடிவு செய்யும் போது நீங்கள் EMIஐ செலுத்துவீர்களா என பரிசீலிக்கும். வங்கிகள் நிலையான பொறுப்புகள் மற்றும் வருமானத்திற்கு இடையேயுள்ள விகிதத்தின் (FOIR) அடிப்படையில் கடன்கள் வழங்குகின்றன. இதன் கொள்கைத்தத்துவம் என்னவென்றால் மாதம்தோறும் உங்கள் நிலையான பொருளாதார கடமைகள் (பரிசீலனையில் உள்ள கடனையும் உள்ளிட்ட மற்ற EMIக்கள்) உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
FOIR = நிலையான கடமைகள் / நிகர வருமானம்
ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு தனித்துவமான உச்ச வரம்பு இருக்கும். இது 40% இலிருந்து 50% வரை வேறுபடும். ஒரு கடனின் EMI உங்கள் நிகர வருமானத்தின் முனை சதவிகிதத்தை மீறினால் வங்கிகள் கடனை ஒப்பாது. எனவே உங்கள் நிகர மாத வருமானம் ரூ.50,000 மற்றும் FOIR 50% எனில் ரூ.25,000 ஐ EMI யாக கொண்டுள்ள ஒரு கடனுக்கு வங்கிகள் ஒப்பாது.
நீங்கள் வீட்டு வாடகை போன்ற மற்ற நிலையான பொறுப்புகளை வழங்கலாம். வங்கி வாடகையை ஒரு நிலையான கடமை என கருதினால் உச்சவரம்பு பெரும்பாலும் சிறிது அதிகமாக இருக்கும்.
உங்கள் வீட்டு கடன் தகுதியை அதிகப்படுத்தும் காரணிகள்:
- நல்ல ரீபேமென்ட் வரலாறு
- நிலையான கடந்த கால நிதி
- கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுக்கான நிலுவைத் தொகை இல்லை
- கிரெடிட் ஸ்கோர் 750 க்கு மேல்
- நிலையான வருமானம்
- இணை விண்ணப்பதாரராக பணிபுரியும் வாழ்க்கைத்துணை
- குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம்
- குறைவான சார்புடையவர்கள்
உங்கள் வீட்டு கடன் தகுதியை அதிகரித்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒன்று அல்லது இந்த முறைகளின் கலவை மூலம் உங்கள் வீட்டு கடன் தகுதியை பெரியளவில் அதிகரிக்கலாம்.
- உங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்ளுங்கள்: தெளிவாக இதுதான் மிகவும் வெளிப்படையான பதில். ஆனால் மிகவும் எளிமையானது அல்ல. பணம் ஈட்டல் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் கடன் தகுதியும் அதிகரிக்கும். உங்களுக்கு வருமானம் ஈட்டும் சொத்துக்கள் இருந்தால் அவற்றையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணமாக உங்களுக்கு இரண்டாவது வீடிருந்து அதை வாடகைக்கு விட்டிருக்க வில்லையென்றால் இப்போது அதை விடலாம். ஆனால் இந்த வருமானம் உங்கள் வருமான வரி தாக்கலில் காட்டப்படவேண்டும்.
- நீண்ட கடன் காலத்தை தேர்ந்தெடுங்கள்: உங்கள் கடன் காலத்தை அதிகரித்தால் உங்கள் வீட்டு கடன் தகுதி அதிகரிக்கும். ஏனெனில் இது கடன் நிறுவனத்தின் மனதில் நீங்கள் தொகையை குறித்தவாறு திருப்பி செலுத்த அவகாசம் அதிகமுள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். எனவே குறித்த காலக்கெடுக்களில் தொகைகள் திரும்ப செலுத்தப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நீண்ட காலங்களை கொண்ட கடன்களை திரும்ப செலுத்த கடன் பெற்றவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்கிறது. இது குறித்த கால தொகை செலுத்தல்களை உறுதிபடுத்துவதோடு கடன் வழங்குபவருக்கு ஆபத்தையும் குறைக்கிறது.
- உங்கள் நடப்பு கடன்களை பைசல் செய்யுங்கள்: நடப்பு கடன்களை பைசல் செய்வது கடன் விண்ணப்ப ஒப்புதல் பெறுவதன் வாய்ப்பை அதிகரிக்கிறது. கடனுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் நடப்பில் எந்த கடன்களும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் தனிநபர் அல்லது வாகன கடனையும் கடன் அட்டை கடனையும் விண்ணப்ப செயல்முறையை தொடங்குமுன் செலுத்தி முடியுங்கள். உங்கள் கடன் அட்டையை அடிக்கடி பயன்படுத்தினால் உங்கள் கடன் தொகைகளை ஒரே மூச்சில் செலுத்துங்கள். இது தாமத கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியதிலிருந்து பாதுகாக்கும். வீட்டு கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு எவ்வித கடனும் இல்லையென்றால் கடன் ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
- மாறும் ஊதியத்தை பதிவு செய்யுங்கள்: உங்கள் தகுதியை அதிகரிக்கும் மற்றொரு வழி யாதெனில் உங்களுக்கு கிடைக்கும் ஊதியத்தின் மற்ற பகுதிகளை பதிவு செய்து வைத்து கொண்டு அவற்றின் சான்றை வருமான ஆவணங்களுடன் சமர்பித்தல் ஆகும். பல நிறுவனங்கள் மாத ஊக்கத்தொகைகளையும் ஆண்டு போனஸ் தொகைகளையும் தங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன. இவை ஆண்டு வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும். இது மாறும் ஊதியம் என அறியப்படுகிறது. கடன் நிறுவனங்கள் உங்கள் கடன் தகுதியை பரிசீலிக்கும்போது இந்த மாறும் ஊதியத்தையும் கணக்கில் எடுக்கின்றனர். எனவே இவற்றை கட்டாயம் பதிவு செய்து ஆவணங்களை பராமரியுங்கள்.
- இணை வீட்டு கடனை தேர்ந்தெடுக்கவும்: உங்கள் கடன் தகுதியை அதிகரிக்க உதவும் எளிய வழிகளில் ஒன்று இணை-வீட்டு கடனை பயன்படுத்துவதே. பணிபுரியும் ஒருவரை வீட்டு கடனில் இணைத்துக்கொள்வது உங்கள் கடன் விண்ணப்பம் ஒப்புதல் பெறும் வாய்ப்பை பெருமளவு அதிகரிக்கும். அவ்வாறு ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்த்தால் கடன் நிறுவனம் இருவரின் வருமானங்களையும் கருத்தில் கொள்ளும். நீங்களும் ஓர் அதிக தொகையை கடனாக பெறலாம்.
- வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதில் பீதியடையவோ அவசரப்படவோ செய்யாதீர்கள். கடன் விண்ணப்பிப்பதற்கு முன் சரியான ஆராய்ச்சி மற்றும் நேரம் தேவை. உங்கள் பட்ஜெட்டை மதிப்பிடுங்கள், உங்கள் வருவாய் அல்லது வருமானத்தை கணக்கிடுங்கள், பிழைகள் குறித்த உங்கள் சிபில் அறிக்கையை சரிபார்க்கவும், கடன் விருப்பங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும், நிலையான அல்லது மாறும் வட்டி விகிதத்திலிருந்து தேர்வுசெய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் குறைந்தபட்ச கூடுதல் கட்டணங்களுடன் விரும்பிய வட்டி விகிதங்களைத் தேர்வு செய்யவும்.
வீட்டுக் கடன் வாங்குவது ஒருவரின் வாழ்வில் மிகவும் கடினமான மற்றும் மிக பெரிய பொருளாதார முடிவுகளில் ஒன்றாகும். எனவே இந்த எளிய வழிகளை கருத்தில் கொள்வது மூலம் உங்கள் வீட்டு கடன் தகுதியை அதிகரித்து கொள்ளலாம். மேலும் உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதில் உங்களுக்கு பெருமளவு உதவலாம்.
இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.