HFFC வீட்டு கடன் கால்குலேட்டர்: EMI மற்றும் தகுதியை எச்எப்எப்சி கால்குலேட்டர் உதவி கொண்டு கணக்கிடுங்கள்
•
HFFC வீட்டு கடன் கால்குலேட்டர் என்பது ஒரு வீட்டு கடனுக்கான EMI ஐ கணக்கிட உதவும் ஆன்லைன் கருவியாகும். வீட்டு கடனை சேர்ந்துள்ள வட்டியுடன் குறித்த காலத்தில் திரும்ப செலுத்துவதற்கு துல்லியமான நிதி திட்டம் தேவைப்படுகிறது.
கடனை தேர்ந்தெடுப்பதற்கு முன் திரும்ப செலுத்தும் ஆற்றலை தீர்மானிப்பது மிக முக்கியமாகும். இது எவ்வித பொருளாதார சிக்கலையும் தவிர்க்க உதவும். இதில்தான் வீட்டு கடன் EMI கால்குலேட்டர் பெரிதாக உதவுகிறது.
HFFC சம்பளம் பெறுபவர்கள், சுய-வேலை செய்பவர்கள் மற்றும் சுய-தொழில் முனைவோர்களுக்கு வீட்டு கடன்கள் வழங்குகிறது. சிறப்பு வீட்டு கடன்கள் வேளாண்மை செய்பவர்கள், பயிர் நடுபவர்கள், தோட்டக்கலை நிபுணர்கள் மற்றும் பால் பண்ணை விவசாயிகளுக்கென வடிவமைக்கப்பட்டது.
EMI அல்லது சமமாக்கப்பட்ட மாத தவணைகள் என்பது இரண்டு பகுதிகளை கொண்டது – அசல் கடன் தொகை மற்றும் அதன் வட்டி. HFFC வங்கி வீட்டு கடன் கால்குலேட்டர் வங்கியின் வலைதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது கடன் பெறுபவர்களுக்கு ஒட்டுமொத்த கடன் செலவு மற்றும் அதற்கான வட்டியின் வெளிப்படையான உருவத்தை வழங்குகிறது.
HFFC கடனுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள நன்மைகள்
- அனுபவம் பெற்ற ஊழியர்களால் சுலபமான மற்றும் எளிய கடன் செயல்முறையை பெற இயலும்.
- எவ்வித மறைமுக கட்டணங்களுமற்ற வகையில் பரிவர்த்தனைகள் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன.
- சொத்து வாங்கும்போது ஒருவருக்கு ஆலோசனை சேவைகள் கிடைக்கப்பெறுகிறது.
- ஒருங்கமைந்த கிளை வலைத்தொடர் மூலம் ஒரு நபரால் எந்தவொரு HFFC கிளையிலும் கடன் பெற்று இந்தியாவில் எந்த இடத்திலும் வீடு வாங்க இயலும்.
- நாங்கள் நெகிழ்வான கடன் திரும்ப செலுத்தும் வசதிகளையும் பாதுகாப்பான ஆவண பாதுகாப்பையும் வழங்குகிறோம்.
- HFFC வீட்டு கடன் EMI கால்குலேட்டர் மற்றும் HFFC வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர் போன்ற பல்வேறு ஆன்லைன் கருவிகள் கடன் பெறுபவர்களுக்கு கடன் விண்ணப்பம் செய்யுமுன் வசதியான முடிவுகளை எடுக்க உதவும் வகையில்கிடைக்கப்பெறுகின்றன.
- HFFC வங்கி கணக்கிலிருந்து ஆட்டோமேட்டட் EMI ரீபேமென்ட் வசதியானது கடன் பெறுபவர்களுக்கு தங்கள் கடனை சுலபமாக திரும்ப செலுத்தும் வகையில் கிடைக்கிறது.
HFFC வீட்டு கடன் EMI கால்குலேட்டர் பற்றி மேலும் அறிக:
வீட்டு கடன் EMI கால்குலேட்டரை பற்றி புரிந்துகொள்ளும் முன் வீட்டு கடன் EMI என்றால் என்ன என்ற அவசியமான விவரத்தை புரிந்து கொள்ளுதல் அவசியம். ஏனெனில் நீங்கள் என்ன கணக்கிடுகிறீர்கள் என அறிந்திருக்கவில்லை எனில் இந்த கால்குலேட்டரை பற்றி அறிய நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் வீணாகிவிடும். EMI (சமமாக்கப்பட்ட மாதாந்திர தவணைகளின் சுருக்கம்) என்பது நீங்கள் உங்கள் கடனை நீங்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை மூலம் திரும்ப செலுத்தும் மாதாந்திர தவணை தொகைகளாகும். நம்மில் பலர் தங்கள் கனவு இல்லத்தை வாங்க ஒரே தவணையில் செலுத்த இயலாததால் அவர்கள் நெகிழ்வான EMI வசதியை நாடுகின்றனர்.
இப்போது நீங்கள் வீட்டு கடன் EMI ஐ பற்றி அறிந்துக்கொண்டதால் உங்களுக்கு மிகவும் பிரபலமாக பேசப்படும் HFFC வீட்டு கடன் EMI கால்குலேட்டரை அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. இந்த கால்குலேட்டர் உங்கள் EMI தொகையை ஒரு சில அடிப்படை விவரங்களின் உதவியுடன் மதிப்பிட உதவுகிறது. மற்ற கால்குலேட்டர்களை போன்றே இது நீங்கள் வழங்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி கொள்கிறது. HFFC வீட்டு கடன் EMI கால்குலேட்டரை பொருத்தவரை இதற்கு வெறும் மூன்று உள்ளீடுகள் மட்டுமே தேவை – கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் கடன் காலம். இந்த விவரங்களை நீங்கள் உள்ளிட்டவுடன் EMI தொகை தொடர்பான விவரங்களை பெறுவீர்கள். இதை பயன்படுத்தும் முறை எளிதான காரணத்தால் இது எவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
HFFC வீட்டு கடன் EMI கால்குலேட்டரின் நன்மைகள்
- எளிமை மற்றும் வேகம்: இந்த கால்குலேட்டரை பயன்படுத்த பல்வேறு சிக்கலான மதிப்புகள் எதுவும் தேவையில்லை. உண்மையில் வெறும் மூன்று எளிய விவரங்கள் மாத்திரமே போதுமானது. சிக்கலற்ற தன்மையே இதன் முக்கிய அம்சமாகும். இறுதி விவரத்திற்கான சில வழிகாட்டல்கள் உங்களுக்கு வழங்கப்படுவதால் EMI கணக்கிடுதல் எளிமையாகவும் சிக்கலற்றதாகவும் உள்ளது.
- நிதி நிர்வாகம்: EMI தொகையை பற்றி உங்களுக்கு வெளிப்படையான மதிப்பீடு கிடைத்தவுடன் EMI தொகையை நீங்கள் உங்கள் மாத வருமானத்திலிருந்து மறக்கவும் செலுத்த சுலபமாகவும் இருக்கும் விதத்தில் உங்கள் மாத செலவுகளில் சில மாறுதல்களை செய்துக்கொள்ள நீங்கள் தயாராவீர்கள். இந்த EMI கால்குலேட்டர் நம்பகமான விவரங்களை வழங்குவதன் மூலம் உங்களுக்கு பொருளாதார அதிகாரத்தை வழங்குகிறது.
- முடிவற்ற நெகிழ்வுதன்மை: உங்கள் வருமானத்திற்கு ஏற்றாற்போல் உகந்த EMI மற்றும் கடன் காலத்தின் சரியான கலவையை நீங்கள் பெறும்வரை பல்வேறு மதிப்புகளை உள்ளிட்டு உங்களுக்கு எத்தனை முறை வேண்டுமோ அத்தனை முறையும் இந்த கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். EMI கால்குலேட்டரின் இந்த முடிவற்ற நெகிழ்தன்மை அம்சம் இக்கருவியை கடன் தொகையை முடிவு செய்யுமுன் பயன்படுத்த வேண்டிய ஒரு தேவையாக மாற்றுகிறது. ஒரு குறுகிய கடன் காலத்தை தேர்ந்தெடுத்தால் அதிக EMIக்களை வழங்கும் மற்றும் நீண்ட கடன் காலம் குறைவானவற்றை வழங்கும் என்பதை நினைவில் கொள்க.
- கடன் தொகை மாற்றங்களை காட்டும் அட்டவணை: இந்த கால்குலேட்டர்EMI தொகைகள் மட்டுமல்லாது வெவ்வேறு காலகட்டங்களில் மீதமிருக்கும் அசல் மற்றும் வட்டி தொகைகளையும் காண்பிக்கும். இதன் மூலம் நீங்கள் வங்கிக்கும் வருகை தந்து செலுத்த வேண்டிய தொகைகளை பற்றி மேலும் தெளிவு பெறலாம்.
HFFC வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர்:
வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர் என்பது ஒரு வலைத்தள கருவியாகும். இது உங்களுக்கு கிடைக்கபெறும் உச்சவரம்பு கடனை காண்பிக்கும். வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் கடன் உச்சவரம்பு தகுதியை தீர்மானித்துக் கொள்வது விண்ணப்பத்திற்கு ஒப்புதல் பெறும் வாய்ப்பை அதிகரிக்கிறது. வருமானம் மற்றும் ரீபேமென்ட் ஆற்றலின் அடிப்படையில் இந்த கால்குலேட்டர் உடனடி தகவல்களை வழங்குகிறது. இதற்கு நிலையான மாத செலவுகள், வயது போன்ற விவரங்கள் தேவை. ஒரு கடன் கோரிக்கைக்கு ஒப்புமுன் கடன் நிறுவனங்கள் வேறு பல அம்சங்களையும் கருதுகின்றன. அவையாவன கிரெடிட் ஸ்கோர், பொருளாதார நிலை, இன்னும் பிற.
வீட்டுக் கடன் தகுதியைக் கணக்கிடுங்கள்
உங்கள் வீட்டு கடன் தகுதியை நீங்கள் எவ்வாறு அதிகரித்து கொள்ள முடியும்:
- ஒன்றாக இணைந்து விண்ணப்பித்தல்: உங்கள் வருமானம் ஈட்டும் வாழ்க்கைத்துணையையோ இணைந்து விண்ணப்பித்தலில் ஒரு கோ-அப்ளிகன்டையோ சேர்த்து கொள்வதன் மூலம் உங்கள் கடன் தகுதி வெகுவாக உயரும். ஏனென்றால் உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்க இணை-விண்ணப்பதாரரின் வருமானமும் கணக்கில் கொள்ளப்படும். ஆனால் மேற்கூறிய கூடுதல் தகுதி அம்சங்கள் இணை-விண்ணப்பதாரருக்கும் பொருந்தும்.
- மற்ற நடப்பு கடன்களை அடைத்தல்: நீங்கள் மற்ற EMIக்களை செலுத்துபவர் என்றால் அக்கடன்களை முன்கூட்டியே அடைப்பது பற்றி பரிசீலியுங்கள். ஏனெனில் வீட்டு கடன் EMIக்காக உங்களுக்கு மிகப்பெரிய உபரி தொகை மாதந்தோறும் கிடைக்கும். இதுவும் உங்கள் தகுதியை பலப்படுத்தும்.
இக்காலத்தில் வீட்டு கடன்கள் மிகவும் வழக்கமான ஒன்றாகிவிட்டன. பல நிதி நிறுவனங்கள் மற்றும் எச்டிஎப்எப்சி வீட்டு கடன்கள், ஐசிஐசிஐ வீட்டு கடன்கள், எஸ்பிஐ வீட்டு கடன்கள் போன்ற வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு ஒரு வசதியான கடன் செலுத்தும் காலகட்டத்தையும் வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன. EMIக்கள் மூலம் ரீபேமென்ட்டை சுலபமாக்குகின்றன. ரீபேமென்ட் காலத்தின் ஒவ்வொரு மாதமும் தவணை நிலையானதாக அமைத்து தருகின்றன. ஒரு தனிநபர் செலுத்த வேண்டிய EMI தொகையை பற்றி புரிந்துகொண்டு முதலீடுகளை திறம்பட திட்டமிட எச்எப்எப் சி வீட்டு கடன் கால்குலேட்டர் பயன்படுகிறது.
இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.