பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
Pushpanjali • October 29, 2024
Read this in Hindi, Telugu, English & Gujarati.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா [Pradhan Mantri Awas Yojana] (PMAY) திட்டம் என்பது முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. உங்களின் வீட்டுக் கடன் வட்டிக்கான மானியம் என்பது PMAY உங்களுக்கு வழங்கும் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டுக் கடனில் PMAY மானியத்தை கோருவது உங்களின் தகுதிக்கான ஒரு எளிய அடித்தளமாகும். நீங்கள் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா [Pradhan Mantri Awas Yojana] திட்டத்திற்கு விண்ணப்பித்து, இந்த திட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட கார்பெட் ஏரியா விதிமுறைகளை பூர்த்தி செய்யும் ஒரு வீட்டை வாங்கினால், உங்கள் தகுதிக்கு ஒரு எளிய அடித்தளம் உள்ளது.
1 கோடி பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அற்பன் [Pradhan Mantri Awas Yojana- Urban] (PMAY-U) 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகளை கட்டுதல், வாங்குதல் அல்லது வாடகைக்கு எடுப்பது போன்றவற்றுக்கு உதவிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மலிவு விலையில் அனைத்து காலநிலையிலும் ஏற்ற பக்கா வீடுகளை வழங்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. PMAY-U திட்டத்தின் கீழ் 1.18 கோடி வீடுகள் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு, 85.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நகர்ப்புற இந்தியா முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
PMAY: இதன் பயன் யாருக்கு கிடைக்கும்?
PMAY திட்டத்தின் முதன்மைப் பயனாளிகள் என்பது சொந்தமாக ஒரு பக்கா வீடு தேவைப்படுகின்ற நலிந்த பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் எனினும், விதவைகள், சிறுபான்மையினர், SC/ST பிரிவினர், கட்டுமானத் தொழிலாளர்கள், குடிசைவாசிகள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
PMAY 2.0 திட்டத்தின் தகுதி வரம்புகள்
PMAY- U 2.0 திட்டத்தின் பலனைப் பெறுவதற்கான சில தகுதி வரம்புகள் பின்வருமாறு-
- நாட்டில் எங்கும் உங்களுக்கு பக்கா வீடு இருக்கக்கூடாது.
- EWS (எகனாமீகலி வீக்கர் செக்ஷன் [Economically Weaker Section]) பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- LIG (லோ-இன்கம் குரூப் [Low-Income Group]) குறைந்த வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை இருக்க வேண்டும்.
- MIG (மிடில் இன்கம் குரூப் [Middle Income Group]) நடுத்தர வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை இருக்க வேண்டும்.
- நீங்கள் இதற்கு முன்னர் அரசாங்கத்தின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் எந்தவொரு நிதி உதவியையும் பெற்றிருக்கக் கூடாது.
- ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் இத்திட்டத்தின் கீழ் வரக்கூடாது.
PMAY-U 2.0 திட்டத்தின் கீழ் இருக்கும் செங்குத்துத் துறைகள்
குடிமக்களுக்கு நன்மைகளை வழங்க PMAY 2.0 செயல்படும் செங்குத்துத் துறைகள் பின்வருமாறு –
- பெனிபிசியரி-லேட் கண்ஸ்ட்ரக்ஷன் [Beneficiary-Led Construction] (BLC) – பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம் கொண்ட இதில், EWS இன் கீழ் தகுதிபெற்ற குடும்பங்கள் தங்களது சொந்த நிலத்தில் புதிய வீடுகளைக் கட்டுவதன் மூலம் பயனடைவார்கள்.
- அப்போர்டப்ல் ஹவுசிங் இன் பார்ட்னர்ஷிப் [Affordable Housing in Partnership] (AHP) – பார்ட்னர்ஷிப்பில் மலிவு விலை வீடுகள் கொண்ட AHP இன் கீழ், தனியார் துறை திட்டத்தில் இருந்து வீடு வாங்கும் போது, வாங்குபவர்களுக்கு மீட்கக்கூடிய வீட்டுவசதி வவுச்சர்கள் வழங்கப்படும். புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டால், ஒரு சதுர மீட்டருக்கு/யூனிட்டிற்கு கூடுதலாக ₹ 1000 ரூபாய் வழங்கப்படும்.
- அப்போர்டப்ல் ரெண்டல் ஹவுசிங் [Affordable Rental Housing] (ARH) – மலிவு விலையில் வாடகை வீடு என்பது நகர்ப்புற புலம்பெயர்ந்தோர், மாணவர்கள், தொழில்துறை தொழிலாளர்கள், பணிபுரியும் பெண்கள் போன்றவர்களுக்கு வாடகைக்கு வீடுகள் வழங்கும் ஒரு தனித்துவமான திட்டமாகும்.குறுகிய கால தங்குமிடத்தை தேடும் மற்றும் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்க விரும்பாத மக்களுக்கு மலிவு மற்றும் சுகாதாரமான வாழ்க்கை நிலைமைகளை ARH உறுதி செய்யும்.
- இன்டெர்நெட் சப்சிடி ஸ்கீம் [Interest Subsidy Scheme] (ISS) – இந்த வட்டி மானியத் திட்டத்தின் கீழ், EWS, LIG மற்றும் MIG குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களில் மானியங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்ச சொத்து மதிப்பு ₹35 லட்சத்துக்கு குறைவாகவும், கடன் மதிப்பு ₹25 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் 4% வட்டி மானியம் வழங்கப்படும். ₹8 வீட்டுக் கடன் மானியம் ஐந்து ஆண்டு தவணைகளில் வழங்கப்படும்.
Also Read