அடமான கடன் என்றால் என்ன? அடமான கடனின் அடிப்படைகளை அறிந்துகொள்ளுங்கள்
•
வாழ்வில் நாம் செலவுகளை தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். இவற்றில் பல வர்த்தக விரிவாக்கம், திருமணம், மருத்துவ அவசரநிலைகள் அல்லது கல்வி போன்றவற்றை உள்ளடக்கும். இவற்றை எதிகொள்ள உதவும் ஒரு உபாயம் என்னவென்றால் அது அடமான கடனாகும். அடமான கடன்கள் பாதுகாக்கப்பட்ட கடன்கள் வகையை சேர்ந்தவை. கடன் பெறுபவர் கடன் வழங்குபவரிடம் ஒரு சொத்தை அடமானம் செய்து அதற்கீடாக கடன் பெறுகிறார்.வட்டி உள்ளிட்ட முழு கடன் தொகை திரும்ப செலுத்தப்படும் வரை கடன் வழங்குபவர் அந்த இணை-அடைமானத்தை தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார். இக்கடன் சமன்படுத்தப்பட்ட மாத தவணைகள் அல்லது EMIக்கள் முறையில் திரும்ப செலுத்தப்படுகிறது.
அடமான கடன் என்றால் என்ன?
அடமான கடன் என்பது உங்களுடைய சொத்துக்கு ஈடாக பெறும் கடனை குறிக்கும். இது உங்கள் வீடு, கடை அல்லது விவசாயமில்லா நிலமாக இருக்கலாம். அடமான கடன்கள் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. கடன் வழங்குபவர் உங்களுக்கு ஒரு தொகையை கடனாக வழங்கி அதற்கு வட்டி வசூலிப்பார். நீங்கள் கடனை எளிய தவணைகளில் திரும்ப செலுத்துவீர்கள். உங்கள் சொத்துதான் உங்கள் கடனுக்கான உத்தரவாதம். இது நீங்கள் கடனை முழுமையாக திரும்ப செலுத்தும் வரை அது கடன் வழங்குபவரின் பாதுகாப்பில் இருக்கும். கடன் காலம் முழுவதும் கடன் வழங்குபவர் அந்த சொத்தின் மீது சட்டபூர்வமாக உரிமை கொண்டாடுவார். எனவே நீங்கள் கடனை திரும்ப செலுத்த தவறினால் அவர் அந்த சொத்தை பறிமுதல் செய்து அதை ஏலத்திற்கு விடும் உரிமையை படைத்திருப்பார்.
அடமான கடன்களின் வகைகள்?
பல்வேறு வகை அடமான கடன்கள் உள்ளன:
- எளிய அடமானம்: இத்தகைய அடமானத்தில் கடன் பெறுபவர் தான் கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்தத் தவறும் பட்சத்தில் கடன் வழங்குபவர் அடமான சொத்தை எவருக்கேனும் விற்று தனது கடனை மீட்டுக்கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்.
- நிபந்தனையின் அடிப்படையில் விற்பனை அடமானம்: இத்தகைய அடமானத்தில் கடன்வழங்குபவர் கடன் பெறுபவர் கடனை திரும்ப செலுத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய ஒரு சில நிபந்தனைகளை முன்வைக்கலாம். இது மாத தவணைகள் செலுத்தப்படுவதில் தாமதம், தவணை செலுத்த தவறியதால் ஏற்பட்ட வட்டி விகித ஏற்றம், மற்றும் பல நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்து விற்கப்படும். போன்ற நிபந்தனைகளை உள்ளடக்கும்.
- ஆங்கில அடமானம்: இத்தகைய அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் பெறும் சமயத்தில் சொத்தை கடன் வழங்குபவரின் பெயரில் மாற்றியமைக்க வேண்டும், கடன் முழுதும் திரும்ப செலுத்தப்பட்டவுடன் மீண்டும் சொத்து கடன் பெறுபவரின் பெயருக்கு மாற்றியமைக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்.
- நிலையான-விகித அடமானம். கடன் வழங்குபவர் வட்டி விகிதம் கடன் காலம் முழுதும் நிலையாக இருக்கும் என்று கடன் பெறுபவருக்கு உத்தரவாதம் அளிப்பது இந்த வகை அடைமானத்தை குறிக்கும்.
- முழு ஆதாய அடமானம்: இத்தகைய அடமானம் கடன் வழங்குபவருக்கு ஒரு சலுகையை வழங்குகிறது. அவர் கடன் காலம் முழுதும் அந்த சொத்தை பயன்படுத்தலாம் அல்லது அதிலிருந்து வரும் வாடகை அல்லது வேறு பயன்பாடு போன்ற ஆதாயங்களை அனுபவித்துக்கொள்ளலாம். ஆனால் உரிமைகளில் பல உரிமையாலரையே சாரும்.
- பல்லுறுப்பு அடமானம்: இது பல்வேறு அடமானங்களின் கலவையை குறிக்கும்.
- தலைகீழ் அடமானம்: இதில் கடன் வழங்குபவர் மாத அடிப்படையில் கடன் வழங்குகிறார். மொத்த தொகையும் தவணைகளாக பிரிக்கப்படுகின்றன. கடன் வழங்குபவர் கடன் பெறுபவருக்கு அந்த தொகையை தவணைகளாக வழங்குகிறார்.
- பத்திர ஒப்படைப்பு அடைமானம்: இத்தகைய அடமானத்தில் சொத்தின் உரிமைகள் கடன் வழங்குபவருக்கு மாற்றியமைக்கப்படுகின்றன. வங்கி அடமான கடன்களுக்கு இந்த முறைதான் வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இது சொத்தை பாதுகாக்க செய்யபடுகிறது.
அடமான ஒப்பந்தம் என்றால் என்ன?
ஒரு அடமான ஒப்பந்தம் ஒரு வங்கி மற்றும் கடன் பெறுபவருக்கு இடையே ஒப்பந்த நிபந்தனைகளை அமைக்கிறது. குறிக்கப்பட்டவுடன் கடன் பெறுபவர் நிதிக்கான அணுகலை பெறுகிறார். இத்தகைய ஒப்பந்தம் கடன் பெறுபவர் தனது கடன் தவணைகளை செலுத்த தவறினால் கடன் வழங்குபவருக்கு விற்கப்படும் சொத்தை கோரும் உரிமையையும் வழங்குகிறது.
அடமானத்தின் முக்கியத்துவம்:
வீடு வாங்குவதுதான் நீங்கள் வாழ்விலேயே வாங்கும் மிகப்பெரிய பண்டம். எனவே வீட்டு கடன் என்பது உங்களுடைய மிகப்பெரிய நிதி பொறுப்பு. வீட்டு கடன் ரீபேமென்ட்டுகளை பல வருடங்களுக்கு நீங்கள் நீடிக்க இயலுவதால் மாதாமாதம் நீங்கள் செலுத்தும் தவணையானது நியாயமாகவும் மலிவானதாகவும் அமைகிறது.
ஒருவர் தனது முதல் அடமான கடனை பெறும்போது அவர்கள் இயல்பாக ஒரு நீண்ட கடனடைப்பு காலத்தை தேர்ந்தெடுப்பார். ஆனால் இதற்கென சிறப்பான வழிகாட்டல்கள் எதுவுமில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் அதிக காலம் வாழ இயலுவதாலும் ஓய்வு வயது அதிகரிப்பதாலும் 30-வருட அடமானம் வழக்கமாகி வருகிறது. இது உங்கள் மாத தொகை செலுத்தல்களை குறைக்க உதவும். ஆனால் அதே சமயம் உங்கள் நிதி சுமை நீண்ட காலத்திற்கு தொடருகிறது.
உங்களால் இயன்ற மிக குறுகிய கடன் காலத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதனால் நீங்கள் விரைவிலேயே அடமானத்திலிருந்து மீளுவது மட்டுமல்லாமல் ஒரு பெரும் தொகையை வட்டியாக கட்ட வேண்டியதுமில்லை. மேலும் நீங்கள் மறு அடமானம் வைத்து வேறொரு திட்டத்திற்கு சென்றால் மற்றொரு 25 ஆண்டு காலமோ அல்லது அதிக காலத்தையோ தேர்ந்தெடுக்ககூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.