இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு வகையான அடமான கடன்கள்
•
மிகவும் கவர்ச்சியான மிகவும் பரிந்துரைக்கப்படும் மற்றும் மிகவும் விரும்பப்படும் செக்யூர்ட் கடன் எதுவென்றால் சந்தேகமில்லாமல் அது அடமான கடன்தான். இவை பல்வேறு அம்சங்கள், நன்மைகள் மற்றும் பன்முகத்தன்மையை கொண்டுள்ளன. வங்கிகள் மற்றும் NBFCக்கள் இத்தகைய செக்யூர்ட் கடனை வழங்குகின்றன. சொத்தின் மதிப்பில் சுமார் 70% கடன் தொகையாக வழங்கப்படுகிறது. மக்களுக்கு எவையெவை விருப்பமாக அமைகின்றனவோ அவற்றின் அடிப்படையில் பல்வேறு அடமான கடன்கள் வழங்கப்படுகின்றன.
அடமான கடன் என்றால் என்ன?
அடமான கடன் என்பது உங்களுடைய சொத்துக்கு ஈடாக பெறும் கடனை குறிக்கும். இது உங்கள் வீடு, கடை அல்லது விவசாயமில்லா நிலமாக இருக்கலாம். அடமான கடன்கள் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. கடன் வழங்குபவர் உங்களுக்கு ஒரு தொகையை கடனாக வழங்கி அதற்கு வட்டி வசூலிப்பார். நீங்கள் கடனை எளிய தவணைகளில் திரும்ப செலுத்துவீர்கள். உங்கள் சொத்துதான் உங்கள் கடனுக்கான உத்தரவாதம். இது நீங்கள் கடனை முழுமையாக திரும்ப செலுத்தும் வரை அது கடன் வழங்குபவரின் பாதுகாப்பில் இருக்கும். கடன் காலம் முழுவதும் கடன் வழங்குபவர் அந்த சொத்தின் மீது சட்டபூர்வமாக உரிமை கொண்டாடுவார். எனவே நீங்கள் கடனை திரும்ப செலுத்த தவறினால் அவர் அந்த சொத்தை பறிமுதல் செய்து அதை ஏலத்திற்கு விடும் உரிமையை படைத்திருப்பார்.
நாம் இப்போது அடமான கடனின் பல்வேறு வகைகளை பார்ப்போம்:
சொத்துக்கு ஈடாக கடன்:
இந்த கடன் பொதுவாக LAP என்று அறியப்படுகிறது. LAP என்பது வர்த்தக மற்றும் குடியிருப்பு சொத்துக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கடன் பெறுபவர்கள் தங்கள் சொத்தை முன்னனி கடன் நிறுவனங்களிடம் அடகு வைக்க வேண்டியிருக்கும். கடனை முழுவதும் அடைக்கும் வரை அதிகாரபூர்வமான பத்திரங்களை கடன் வழங்குபவரிடம் அடமானம் வைக்க வேண்டும். இத்தகைய கடன்களை EMI அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும். பல வங்கிகள் தங்கள் வலைதளங்களில் சொத்துக்கு ஈடாக கடனுக்கான EMI யை கணக்கிடும் வசதியை வழங்குகின்றன. இது கடன் பெறுபவர்களின் வசதிக்கெனவே கிடைக்கப்பெறுகிறது. இந்த கடன்கள் பொதுவாக 15 வருட காலத்தை கொண்டிருக்கும்.
வர்த்தகரீதியிலான கொள்முதல்:
வர்த்தகரீதியிலான கொள்முதல் கடன்கள் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களால் விரும்பி பெறப்படுகின்றன. அவர்கள் அத்தகைய கடன்களை கடை, அலுவலக இடம் மற்றும் வர்த்தக வளாகம் போன்ற வர்த்தகரீதியிலான சொத்துக்களை வாங்குவதற்காக பெறுகின்றனர். இத்தகைய கொள்முதல்களுக்கு இந்த கடன் மிகவும் உகந்தது. ஆனால் இக்கடன்தொகை சொத்துக்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
குத்தகை வாடகை தள்ளுபடி:
நமது சொந்த குடியிருப்பு அல்லது வர்த்தக சொத்தை குத்தகைக்கு விடுவது என்பது ஒரு பொதுவான வழிமுறையாகும். குத்தகை கடன்கள் பொதுவாக குத்தகை சொத்துக்களுக்கு ஈடாக பெறப்படுகின்றன. இது குத்தகை வாடகை தள்ளுபடி என்றும் அழைக்கப்படுகிறது. மாத வாடகை தொகையே EMI ஆக மாற்றப்படுகிறது மற்றும் கடன் தொகை அந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. கடன் காலம் மற்றும் கடன் தொகை இரண்டும் சொத்து எத்தனை காலம் வரை குத்தகையில் இருக்கும் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. குத்தகை உடன்படிக்கை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் NBFCக்களால் குறிப்பிடப்படுகிறது.
இரண்டாம் அடமான கடன்:
வங்கிகள் மற்றும் NBFCக்கள் ஏற்கனவே ஒரு கடனின் கீழுள்ள சொத்துகளுக்கு அடமான கடன் வழங்குகின்றன. ஒரு கடன் பெறுபவர் தனது சொத்தை கடன் பெற்று இன்று வாங்கினால் அதே சொத்திற்கு தனது சொந்த தேவைகளுக்காக ஒரு கூடுதல் கடனையும் பெறலாம். ஒரு கடன் பெறுபவர் ஒரு அடமான கடனுக்காக விண்ணப்பித்தால் அது பொதுவாக ஒரு வீட்டு கடனின் டாப்-அப் கடன் என்று அழைக்கப்படுகிறது. கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனடைத்தல் வரலாறு நன்கு அமைந்திருந்தால் கடன் வழங்குபவர் ஒரு கூடுதல் கடன் வழங்குவார். கடன் பெறுபவர் அடமான கடனுக்கான EMI ஐ முதல் அடமான கடனுடன் சேர்ந்து கட்ட துவங்கவேண்டும்.
கடனுக்காக தலைகீழ் அடமானம் (RML):
இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு சொந்த வீடு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் வாழ்வை வளப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. கடனுக்காக தலைகீழ் அடமானம் என்பது ரொக்கம் தேவைப்படும் தங்கள் பெயரிலேயே சொத்துள்ள மூத்த குடிமக்கள் நிதி பெறும் ஒரு நல்ல வழியாகும். தங்களுக்கு ஏற்கனவே சொந்தமாயுள்ள சொத்தை அடமானம் வைப்பதன் மூலம் மூத்த குடிமக்கள் ஒரு வங்கியிலிருந்து பணம் கடன் பெறலாம். இது வங்கியினால் மாத தவணைகளாக பட்டுவாடா செய்யப்படுகிறது.
வீட்டு கடன்:
இந்தியாவின் மிக பொதுவான கடன் வீட்டு கடன். நுகர்வோர்கள் குறு, நடுத்தர மற்றும் உண்மையிலேயே பெரிய அளவு கொண்ட வீட்டு கடன்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஏனெனில் வட்டி விகிதங்கள் மிகவும் மலிவாக உள்ளன, கடன் காலம் வசதியாக உள்ளது மற்றும் இதற்கு வரி சலுகையும் கிடைக்கிறது. கடன் பெறுபவருக்கு தனது வீட்டை புதுப்பிக்கவோ, புனருத்தாரணம் செய்யவோ அல்லது மறு-கட்டமைக்கவோ ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு வீடு கட்டுவதற்காக ஒருவர் மனை ஒன்றை வாங்கவோ அல்லது ஏற்கனவே சொந்தமான மனையில் வீடு கட்டவோ அல்லது கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை வாங்கவோ வீட்டு கடன் பெறலாம். இது புதிய அல்லது ரீசேல் சொத்துகளுக்கு பொருந்தும். இருந்தும் கடனாக பெறப்படும் நிதியை கடன் பெறுபவர் வீடு தொடர்பான பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அத்தகைய நிதி வேறெந்த சுய அல்லது வர்த்தக தேவைகளுக்காகவும் பயன்படுத்த கூடாது.
அடமான கடன்களுக்கு விண்ணப்பித்தல்:
இந்தியாவில் அடமான கடனுக்காக விண்ணப்பிப்பது என்பது பொதுவாக சற்று கடினமான ஒரு விஷயம். ஆனால் உரிய ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையை கடைபிடித்தால் இது பிரச்சினையில்லாத ஒன்றாக இருக்கும். சட்ட திட்டங்களை கவனமாக படிக்கவும் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வங்கியின் நன்மை தீமைகளை எடை போடுங்கள். சொத்திற்கு ஈடாக கடன் பெறும் முடிவின் முதல் கட்டமாக விண்ணப்பதாரர் ஒரு பொருத்தமான வங்கியை உரிய ஆவணங்களுடன் அணுகவேண்டும். வங்கியால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் கடனுக்கான ஒப்புதல் உடன் கிடைத்துவிடும். ஒப்புதல் பெற நீங்கள் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். இதில் ஒருசில குறிப்பிட்ட வழிமுறைகள் அடங்கியுள்ளன: வங்கியால் விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரை மதிப்பீடு செய்வது, சொத்து தொடர்பான ஆவணங்களை சேகரித்தல், சட்டப்பூர்வ சரிபார்ப்பு போன்றவை.
இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.