வீட்டுக் கடன் ஈமி கால்குலேட்டர்: உங்கள் வீட்டுக் கடன் ஈமியை அறிந்து கொள்ளுங்கள்

rimzim January 25, 2021

வீட்டுக் கடன் ஈமி கால்குலேட்டர்

நீங்கள் வீட்டு கடன் பெற்று ஒரு வீடு வாங்கும் யோசனையில் இருக்கிறீர்களா? ஆனால் சொத்தின் அதிக விலை மற்றும் நிதி கிடைக்கப்பெறாமை உங்களுக்கு தடையாக உள்ளனவா? வீட்டு கடன்கள் வடிவில் நிதிக்கான அணுகல் சாதாரண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது. இருந்தும் வீட்டு கடன்களோ அல்லது எந்த வகையான கடனோ பல பொறுப்புகளையும் கடமைகளையும் உள்ளடக்குகின்றன. ஒரு பெரும் தொகையை கடனாக பெறும் முன் தனது நிதி வளங்களை பற்றிய ஒரு வெளிப்படையான கருத்தை ஒருவர் கொண்டிருக்கவேண்டும். வீட்டு கடன் பெறுவதற்கு முன்திட்டமிடுதல் முக்கியமாகும். ஏனெனில் இது ஒரு நீண்ட கடன் காலத்தை கொண்டது மற்றும் குடும்ப செலவுகள் மீது நீண்ட கால அழுத்தத்தை ஏற்படுத்துவது. விண்ணப்பத்தில் கையொப்பமிடுமுன் உங்கள் EMI தொகையை கணக்கிட்டு கொள்வது என்பது ஒரு நேர்மையான யோசனையாகும். இதில் வீட்டுக் கடன் ஈமி கால்குலேட்டர் என்ற ஒரு சிறந்த கருவி உங்களுக்கு உதவிகரமாக விளங்கும்.

வீட்டு கடன் EMI என்றால் என்ன?

வீட்டு கடன் EMI கால்குலேட்டரை பற்றி புரிந்துகொள்ளுமுன் வீட்டு கடன் EMIயை பற்றி அடிப்படை விவரங்களை பற்றி அறிந்துகொள்ளுதல் முக்கியம். ஏனெனில் நீங்கள் என்ன கணக்கிடுகிறீர்கள் என அறிந்திருக்கவில்லை எனில் இந்த கால்குலேட்டரை பற்றி அறிய நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் வீணாகிவிடும். EMI (சமமாக்கப்பட்ட மாதாந்திர தவணைகளின் சுருக்கம்) என்பது நீங்கள் உங்கள் கடனை நீங்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை மூலம் திரும்ப செலுத்தும் மாதாந்திர தவணை தொகைகளாகும். நம்மில் பலர் தங்கள் கனவு இல்லத்தை வாங்க ஒரே தவணையில் செலுத்த இயலாததால் அவர்கள் நெகிழ்வான EMI வசதியை நாடுகின்றனர்.

ಹೋಮ್ ಲೋನ್ ಅರ್ಹತೆಯನ್ನು ಲೆಕ್ಕಾಚಾರ ಮಾಡಿ

வீட்டு கடன் EMI கால்குலேட்டர்

இப்போது நீங்கள் வீட்டு கடன் EMI ஐ பற்றி அறிந்துக்கொண்டதால் உங்களுக்கு மிகவும் பிரபலமாக பேசப்படும் எச்எப்எப்சி வீட்டு கடன் EMI கால்குலேட்டரை அறிமுகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. இந்த கால்குலேட்டர் உங்கள் EMI தொகையை ஒரு சில அடிப்படை விவரங்களின் உதவியுடன் மதிப்பிட உதவுகிறது. மற்ற கால்குலேட்டர்களை போன்றே இது நீங்கள் வழங்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி கொள்கிறது. எச்எப்எப்சி வீட்டு கடன் EMI கால்குலேட்டரை பொருத்தவரை இதற்கு வெறும் மூன்று உள்ளீடுகள் மட்டுமே தேவை – கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் கடன் காலம். இந்த விவரங்களை நீங்கள் உள்ளிட்டவுடன் EMI தொகை தொடர்பான விவரங்களை பெறுவீர்கள். இதை பயன்படுத்தும் முறை எளிதான காரணத்தால் இது எவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு கடன் EMI கால்குலேட்டர் சூத்திரம்

EMI தொகையை பின்வரும் எண் சூத்திரம் மூலம் கணக்கிடலாம்:

EMI தொகை = [P x R x (1+R) ^N]/[(1 + R) ^N-1]. இதில் P, R மற்றும் N என்பன மாறிகள். இதனர்த்தம் என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் இந்த மூன்றில் எதையேனும் மாற்றினால் EMI தொகை மாறும் என்பதே.

இங்கே,

P என்பது அசல் தொகையை குறிக்கும். இது வங்கி உங்களுக்கு வழங்கும் முதல் கடன் தொகை. இதனடிப்படையில் ப்ரீமியம் தீர்மானிக்கப்படுகிறது.

R என்பது வங்கியால் தீர்மானிக்கப்படும் வட்டி விகிதம்.

N என்பது கடன் காலம், அதாவது வருடங்களின் எண்ணிக்கை. EMIக்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுவதால் கடன் காலம் மாதங்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்படுகிறது.

வீட்டு கடன் EMIஐ தீர்மானிக்கும் காரணிகள்

அசல் – அசல் என்பது நீங்கள் கடன் நிறுவனத்திடமிருந்து நன்மையடையும் கடன் தொகை. இது உங்கள் EMIக்களுக்கு நேரடி தொடர்பில் உள்ளது – குறைந்த அசல் அட்டவணையிட்ட மாத தவணை தொகைகளை குறைய செய்யும். அதிக அசல் அவற்றை அதிகரிக்க செய்யும்.

வட்டி விகிதம் – இது கடன் நிறுவனம் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியில் கடன் வழங்கும் விகிதமாகும். இது உங்கள் கடன் EMIக்களின் மதிப்பீட்டுடன் நேரடி விகிதத்தில் உள்ளது.

கடன் காலம் – இது நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் காலம். இது உங்கள் EMIக்களுடன் எதிர் விகிதத்தில் உள்ளது. நீண்ட கடன் காலம் மாத தவணை தொகைகளை குறைய செய்யும், குறுகிய கடன் காலம் அவற்றை அதிகரிக்க செய்யும்.

எச்எப்எப்சி வீட்டு கடன் EMI கால்குலேட்டரின் நன்மைகள்

  1. எளிமை மற்றும் வேகம்: இந்த கால்குலேட்டரை பயன்படுத்த பல்வேறு சிக்கலான மதிப்புகள் எதுவும் தேவையில்லை. உண்மையில் வெறும் மூன்று எளிய விவரங்கள் மாத்திரமே போதுமானது. சிக்கலற்ற தன்மையே இதன் முக்கிய அம்சமாகும். இறுதி விவரத்திற்கான சில வழிகாட்டல்கள் உங்களுக்கு வழங்கப்படுவதால் EMI கணக்கிடுதல் எளிமையாகவும் சிக்கலற்றதாகவும் உள்ளது.
  2. நிதி நிர்வாகம்: EMI தொகையை பற்றி உங்களுக்கு வெளிப்படையான மதிப்பீடு கிடைத்தவுடன் EMI தொகையை நீங்கள் உங்கள் மாத வருமானத்திலிருந்து மறக்கவும் செலுத்த சுலபமாகவும் இருக்கும் விதத்தில் உங்கள் மாத செலவுகளில் சில மாறுதல்களை செய்துக்கொள்ள நீங்கள் தயாராவீர்கள். இந்த EMI கால்குலேட்டர் நம்பகமான விவரங்களை வழங்குவதன் மூலம் உங்களுக்கு பொருளாதார அதிகாரத்தை வழங்குகிறது.
  3. முடிவற்ற நெகிழ்வுதன்மை: உங்கள் வருமானத்திற்கு ஏற்றாற்போல் உகந்த EMI மற்றும் கடன் காலத்தின் சரியான கலவையை நீங்கள் பெறும்வரை பல்வேறு மதிப்புகளை உள்ளிட்டு உங்களுக்கு எத்தனை முறை வேண்டுமோ அத்தனை முறையும் இந்த கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். EMI கால்குலேட்டரின் இந்த முடிவற்ற நெகிழ்தன்மை அம்சம் இக்கருவியை கடன் தொகையை முடிவு செய்யுமுன் பயன்படுத்த வேண்டிய ஒரு தேவையாக மாற்றுகிறது. ஒரு குறுகிய கடன் காலத்தை தேர்ந்தெடுத்தால் அதிக EMIக்களை வழங்கும் மற்றும் நீண்ட கடன் காலம் குறைவானவற்றை வழங்கும் என்பதை நினைவில் கொள்க.
  4. கடன் தொகை மாற்றங்களை காட்டும் அட்டவணை: இந்த கால்குலேட்டர்EMI தொகைகள் மட்டுமல்லாது வெவ்வேறு காலகட்டங்களில் மீதமிருக்கும் அசல் மற்றும் வட்டி தொகைகளையும் காண்பிக்கும். இதன் மூலம் நீங்கள் வங்கிக்கும் வருகை தந்து செலுத்த வேண்டிய தொகைகளை பற்றி மேலும் தெளிவு பெறலாம்.

வீட்டு கடன் EMIயின் நன்மைகள்

கடன் பெற்று வீடு வாங்குவது பெரும்பாலும் விலையுயர்ந்ததாக இருந்தாலும் அதில் சில நன்மைகளும் உண்டு, குறிப்பாக வரி தொடர்பான நன்மைகள். அரசு வருமான வரி சட்டம், 1961 மூலம் நீங்கள் ஆண்டுதோறும் செலுத்தும் EMI தொகைகள் மீது சில வரி விலக்குகளை வழங்குகிறது. இவையாவன:

  1. பிரிவு 80C – உங்கள் சொத்து கடன் அசல் தொகை மீதான தொகை செலுத்தல்களுக்கு உங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கிடைக்கிறது.
  2. பிரிவு 24 – இப்பிரிவின் கீழ் வட்டி பகுதியின் மூலம் நீங்கள் ரூ.2 லட்சம் வரை விலக்கு பெறலாம்.
  3. பிரிவு 80EE: இந்த பிரிவின் கீழ், ஆண்டுக்கு ரூ.50,000 வரை கூடுதல் வட்டி தொகையை நீங்கள் கோரலாம். இது பெரும்பாலும் 80 C மற்றும் 24 பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளுக்கு மேல் மற்றும் அதிகமாக உள்ளது. இந்த விலக்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.

Spread the knowledge

This website doesn't
support landscape mode !

Please rotate your device to portrait mode
for the best experience.