உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது: கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த 8 வழிகள்
•
கடன் விண்ணப்ப செயல்முறையில் உங்கள் கிரெடிட் தகவலறிக்கை (CIR) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைந்த ஸ்கோர் உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்புகளை பாதிக்கலாம். எனவே நீங்கள் ஒரு குறைந்த CIBIL கிரெடிட் ஸ்கோர் வரலாற்றை கொண்டிருந்து அதை முன்னேற்ற விரும்பினால் உங்களுக்கு கிடைக்கப்பெறும் வழிகளை பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு “கிரெடிட் பழுதுபார்க்கும்” நிறுவனத்திற்கு சென்று பெரிய தொகையொன்றை கொடுப்பதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தலாம் என்பது எளிதான தீர்வாக அமையாது. சிபிலுக்கும் எந்தவொரு “கிரெடிட் பழுதுபார்க்கும்” நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் – உங்களுக்கு கடன் அட்டையோ அல்லது கடனோ வழங்கும் நிறுவனம் நீங்கள் உங்கள் தொகைகளை உரிய காலத்தில் எந்தளவு சாத்தியமாக திரும்ப செலுத்துவீர்கள் என்று தீர்மானிக்க உதவும் ஒரு மூன்று-இலக்க எண் – என்பது உங்கள் பொருளாதார வாழ்வை பொறுத்தளவில் மிக முக்கியமான ஒன்றாகும். ஸ்கோர் அளவு உயர உயர நீங்கள் கடனுக்கு/கடன் அட்டைக்கு மிக சாதகமான நிபந்தனைகளுடன் தகுதி பெறுவது அதிகரிக்கும். இதன் மூலம் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த விரும்பினால் அதற்கு பல சுலபமான வழிகள் உள்ளன. இதற்கு சிறிது முயற்சியும் நேரமும் தேவை.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த இதோ சில வழிகள்:
- உங்கள் பில் தொகைகளை உரிய காலத்தில் செலுத்துங்கள்: கடன் நிறுவனங்கள் உங்கள் கிரெடிட் அறிக்கையை ஆய்வு செய்து உங்களுக்கான கிரெடிட் ஸ்கோரை கோரும் போது நீங்கள் எத்தனை நம்பகமாக பில் தொகைகளை காட்டுகிறீர்கள் என்று அறிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும். ஏனெனில் கடந்த கால தொகை செலுத்தல் செயல்திறன் எதிர்கால செயல்திறனின் நேர்மையான கணிப்பாகும். ஒவ்வொரு மாதமும் ஒப்புக்கொண்ட தேதிக்குள் நீங்கள் அனைத்து பில் தொகைகளையும் செலுத்தி இந்த கிரெடிட் ஸ்கோர் காரணியை உயர்த்திக்கொள்ள முடியும். தாமதமாகவோ அல்லது குறைவாகவோ கட்டுவது கிரெடிட் ஸ்கோர்களை எதிர்மறையாக பாதிக்கும்.
- உங்கள் கடன் அட்டை பேலன்சை நீக்குங்கள்: நீங்கள் செய்ய வேண்டிய இரண்டாவது செயல் என்னவென்றால் அனைத்து கடன் அட்டை பேலன்சுகளையும் ஒழித்துக்கட்டுவது. பில்லிங் தேதிக்குள் உங்களால் திரும்ப செலுத்த இயலக்கூடிய தொகைக்குள் மாத்திரமே செலவு செய்யுங்கள். பேலன்சுகள் என்பதன் மற்றொரு அர்த்தம் கடன்கள் மற்றும் EMIக்கள் மீதான செலுத்தப்படாத நிலுவைகள் ஆகும். உங்கள் கடன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி செலுத்தப்படாத நிலுவைகளை செலுத்தி உங்கள் கடன் கணக்கை முடித்துக்கொள்ள கேளுங்கள். அத்தகைய செலுத்தப்படாத நிலுவைகள் அல்லது பேலன்சுகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை கீழிறக்கும். இந்த தொகைகளை செலுத்துவது உங்கள் சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோரில் நேர்மறையாக பிரதிபலிக்கும். மேலும் வெறும் ஒன்றிரண்டு கடன் அட்டைகளை மாத்திரமே வைத்திருப்பது ரீபேமென்ட்டுகளை கண்காணித்து செயல்படுத்துவதை மிகவும் சுலபமாக்கும்.
- கிரெடிட் ரியலைசேஷன் விகிதத்தை ஆய்வு செய்யுங்கள்: கடன் அட்டைகள் மூலம் நீங்கள் விரும்பும் அனைத்தையும் வாங்குவதென்பதோ நாகரீகமாகவோ ஒன்றிரண்டு ரிவார்ட் பாயிண்டுகள்/கேஷ்பேக் பெற்று தருவதாக இருந்தாலும் கிரெடிட் பயன்பாடு விகிதத்தை சோதித்து அதை உங்கள் கடன் அட்டைக்கான கடன் வரம்பிற்கு 30% அல்லது அதற்கும் குறைவாக வைத்துக்கொள்வதை பரிந்துரைக்கிறோம். இந்த விதி உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவதிலும் அதை நிர்வகிப்பதிலும் மிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறைந்த-பேலன்ஸ் கடன் அட்டை பயன்பாடு வரலாறு ஆரோக்கியமான சிபில் ஸ்கோரை பிரதிபலிக்கும்.
- உங்கள் வங்கியுடன் தொடர்பிலிருங்கள்: நீங்கள் ஒரு கடினமான சூழலில் இருந்து உங்கள் கடன்கள்/கடன் அட்டை பில்களை உரிய நேரத்திற்குள் செலுத்த இயலவில்லை என்றால் அமைதியாக இருக்காதீர்கள். நீங்கள் வங்கிக்கு வருகை தந்து உங்கள் சிரமங்களையும் உங்களால் உரிய நேரத்தில் தொகைகளை செலுத்த இயலாது என்றும் எடுத்து கூறுங்கள். நீங்கள் உங்கள் வங்கியுடன் நல்ல உறவை பராமரித்திருந்தால் வங்கி உங்கள் சூழ்நிலையை ஆராய்ந்து உங்கள் பேமென்ட்டுகளுக்கான நிபந்தனைகளை சற்று தளர்த்தும் அல்லது காலக்கெடுவை நீடித்து தரும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்காவண்ணம் வங்கி சிறிது அட்ஜஸ்ட்மெண்ட்டுகளை செய்யும்.
- துல்லியமின்மைகளை ஆராயுங்கள்: உங்கள் குறைந்த கிரெடிட் ஸ்கோருக்கான காரணம் எப்பொழுதும் உங்கள் பொருளாதார நடத்தை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. பிழைகளால் கூட கிரெடிட் அறிக்கையில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையக்கூடும். உங்கள் சிபில் அறிக்கையில் பிழைகள் ஏதேனும் உள்ளனவா என சரிபாருங்கள். ஏதேனும் தென்பட்டால் நீங்கள் அதை மறுக்கலாம். அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்வார்கள். உங்கள் பெயரில் எழுத்து பிழை அல்லது சேர்க்கப்படாத ஒரு பரிவர்த்தனை போன்ற சிறு பிழை கூட ஸ்கோரை கீழிறக்கி விடலாம்.
- எந்த கடன் அட்டையையும் கைவிட்டு விடாதீர்கள்: காலப்போக்கில் நீங்கள் சில உயர்-வகை கடன் அட்டைகளை வாங்கியிருப்பீர்கள். எனவே முதன் முதலாக வாங்கிய அடிப்படை அட்டையை பயன்படுத்துவதை நிறுத்தியிருப்பீர்கள். பயன்பாடற்ற அட்டை கணக்கை மூடலாமே என சிலர் கருதலாம். ஆனால் இந்த முடிவுகூட உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். இந்த செயல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளும் கடன் நிறுவனங்களும் பலவகையான கிரெடிட் லைன்களை நீங்கள் நிர்வகிக்க இயலாதவர் என முடிவு செய்ய வழிவகுக்கும். எனவே உங்களிடமுள்ள அனைத்து கடன் அட்டைகளையும் பெயரளவிற்காகவாவது ஒரு சிறு பரிவர்த்தனை செய்து செயலில் வைத்திருங்கள். உங்களிடமுள்ள கடன் வசதிகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த உதவும்.
- நண்பர் அல்லது உறவினரின் உதவியை நாடுங்கள்: உங்கள் கிரெடிட் வரலாற்றின் நீளம் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. FICO உங்கள் கிரெடிட் ஸ்கோரில் 15 சதவிகித்தத்தை உங்களுடைய மிக பழமையான கணக்கின் வயது மற்றும் உங்கள் அனைத்து கணக்குகளின் சராசரி வயதின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. எத்தனை பழமையானதோ அத்தனை சிறந்தது. பெரும்பாலும் நீங்கள் இந்த பிரிவிற்குள் மேம்பட செய்ய வேண்டியதெல்லாம் ஓய்வெடுத்துக்கொண்டு உங்கள் கிரெடிட் ஸ்கோர்கள் வரும் வரை காத்திருப்பதுதான். ஆனாலும் உங்களுக்கு நன்கு நிர்வகிக்கப்பட்ட ஒரு கடன் அட்டை கணக்கு வைத்திருக்கும் பிரியமான ஒருவர் இருந்தால் அவரின் உதவியை நீங்கள் கேட்கலாம். உங்கள் நண்பரோ அல்லது வாழ்க்கை துணையோ உங்களை அவரின் கடன் அட்டையின் இணை-பயனாளராக அங்கீகரித்து சேர்த்துக்கொண்டால் அது உங்கள் கிரெடிட் வரலாற்றை நீட்டிக்க உதவும். இத்தகைய கணக்கு நன்கு பராமரிக்கப்படும் நிலையிலுள்ளது என வைத்துக்கொள்வோம் (உதாரணமாக குறித்த காலக்கெடுக்களில் பணம் செலுத்தல் மற்றும் குறைந்தளவில் கடன் பெறுதல்). உரிமம் பெற்ற பயனாளராக சேர்வது அந்த கணக்கு உங்கள் அறிக்கையில் இடம்பெற்றால் உங்கள் ஸ்கோரை உயர்த்தும்.
- அடிப்படை தத்துவம்: உகந்த ஸ்கோரான 850 ஐ நீங்கள் ஒரே இரவில் பெற இயலாது எனினும் சரியான திசையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிநிலையும் நன்மைகளை பெற்றுத்தரும். நீங்கள் மோசமான கிரெடிட் என்ற நிலையிலிருந்து சுமாரான கிரெடிட் மற்றும் நல்ல கிரெடிட் என்ற நிலையை படிப்படியாக எட்ட எட்ட நீங்கள் நிறைய பணத்தை சேமிக்கலாம் மற்றும் பல வாய்ப்புகளின் நன்மையை பெறலாம். ஒரு சிறந்த ஸ்கோரை அடையவும் பராமரிக்கவும் மிக எளிய வழி என்னவென்றால் நல்ல நீண்ட கால கடன் பழக்கவழக்கங்கள்/நன்னெறிகளை உருவாக்கிக்கொள்வதுதான். உங்கள் பேலன்சுகளை உரிய காலத்தில் செலுத்துங்கள், ஒரு குறைந்த யூடிலைசேஷன் விகிதத்தை பராமரியுங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் கடனை மட்டுமே பெறுங்கள். இந்த அடிப்படை விதியை நீங்கள் கடைபிடித்தால் காலப்போக்கில் உங்கள் ஸ்கோர் தானாகவே உயரும்.
உங்கள் கடன் தகுதியை இங்கே சரிபார்க்கவும்
இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.