வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்பர்
•
வீட்டு கடன் பெற்றவர்கள் மற்றொரு நிறுவனம் குறைந்த வட்டி விகிதம், ப்ரீபேமென்ட் அபராதங்களின்மை அல்லது மற்ற பல்வேறு சலுகைகளை வழங்கினால் அத்தகைய சிறந்த பரிவர்த்தனையின் நன்மையை பெற ஹோம் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்பரை நாடுகின்றனர். அதை தேர்ந்தெடுத்தவுடன் முந்தைய நிறுவனத்தில் இருக்கும் கடனை ஒட்டுமொத்தமாக இந்த புதிய நிறுவனம் அடைக்கின்றது. பின்னர் கடன் பெறுபவர் புதிய நிறுவனத்திற்கு EMIக்களை (சம மாத தவணைகள்) செலுத்த தொடங்குகிறார். நீண்ட கடன் காலத்தை கொண்டுள்ளவர்கள் இம்மாதிரி கடன்களை மாற்றுவது புத்திசாலித்தனமான முடிவாகும் ஏனெனில் நீண்ட காலத்தில் இது அதிகமாக சேமிக்க உதவுகிறது. சேமிப்பின் அளவு நிலுவை தொகை, கடன் காலம், வட்டி விகிதங்களின் வேறுபாடு மற்றும் கடன் மாற்றத்திற்கான கட்டணங்கள் இவற்றை பொறுத்து அமையும்.
வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்பரை தேர்ந்தெடுக்கும் முன் நீங்கள் மனதில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள்:
வட்டி விகித பேச்சுவார்த்தை:
வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்பரை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் நடப்பு கடன் நிறுவனத்துடன் குறைந்த வட்டி விகிதத்திற்கு பேச்சு வார்த்தை நடத்துங்கள். நீங்கள் உங்கள் வங்கியுடன் விசுவாசமாக இருந்து EMIகளை உரிய நேரத்தில் செலுத்தியிருந்தால் அது உங்கள் கிரெடிட் வரலாறு மற்றும் கடன் திருப்பியடைக்கும் ஆற்றல் இவற்றை கவனித்து கோரிக்கையை பரிசீலிக்கும். இதன் மூலம் உங்கள் EMI சுமை குறையும் மற்றும் ப்ரீபேமென்ட், டிரான்ஸ்பர், முன்னடைத்தல், புராசசிங், விண்ணப்பம் மற்றும் நிர்வாக கட்டணங்கள் போன்றவற்றை செலுத்துவதை தவிர்க்கலாம்.
புதிய கடன் நிறுவனத்தின் வட்டி விகித சான்றுகளை சரிபாருங்கள்:
புதிய கடன் நிறுவனம் குறைந்த வட்டி விகிதத்தை விளம்பரபடுத்தினால் அவர்களின் வட்டி நடத்தை/நம்பகத்தன்மையை பற்றி மேலும் விவரங்களை கேட்டறியுங்கள். அவர்கள் அறிவித்துள்ள வட்டி விகிதம் உண்மையா அல்லது குறுகியகால யுக்தியா என்று சரிபாருங்கள்.
கடன் டிரான்ஸ்பருக்கான விலையை கணக்கிடுங்கள்:
உங்கள் வீட்டு கடனை டிரான்ஸ்பர் செய்ய பல கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். இவையாவன பிராசசிங், விண்ணப்பம், சோதனையிடல், நிர்வாகம் மற்றும் வேறு பல கட்டணங்கள் ஆகும். பல சமயங்களில் நடப்பு மற்றும் புதிய வங்கிகள் இரண்டும் டிரான்ஸ்பர் கட்டணங்களை வசூலிக்கும். டிரான்ஸ்பர் செய்ய நீங்கள் செலவழிக்கிற தொகை வட்டி விகித வேறுபாட்டுடன் ஒப்பிடுகையில் அதிகமா அல்லது குறைவா என்றும் டிரான்ஸ்பர் மூலம் நீங்கள் குறிப்பிடத்தக்க சேமிப்பை செய்ய முடியுமா என்றும் கணக்கிடுங்கள். இல்லையென்றால் நீங்கள் மற்றொரு கடன் நிறுவனத்தை நாடவேண்டும் அல்லது நடப்பு நிறுவனத்துடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் கிரெடிட் ரேட்டிங்கை சரிபாருங்கள்:
உங்கள் கிரெடிட் ஸ்கோர் நீங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்பருக்கு தகுதி பெற்றவரா இல்லையா என்று வெளிப்படையாக உணர்த்துகிறது. நீங்கள் உரிய தேதிகளில் EMIக்களை செலுத்தவில்லையென்றால் அது உங்கள் கிரெடிட் ரேட்டிங்கை பாதிக்கும். மோசமான கிரெடிட் ஸ்கோரின் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்பருக்கு அதிகம் தகுதி பெற மாட்டீர்கள் என்று. புதிய நிறுவனம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை கருத்தில் கொள்கிறது என்பதால் உங்கள் கிரெடிட் கார்டு பில்கள், EMIகள் மற்றும் வேறுபல கடன் தொகைகளை முறையாக செலுத்தி வந்து உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி கொள்ளுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கடனை டிரான்ஸ்பர் செய்வதில் எவ்வித சிக்கலும் இருக்காது.
பேலன்ஸ் டிரான்ஸ்பர் கட்டணம்:
வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்பரை தேர்வுசெய்யும் முன் நீங்கள் எப்போதெல்லாம் குறைந்த வட்டிக்கான சலுகையை பார்க்கிறீர்களோ அப்போதெல்லாம் பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்யலாம் என கருதவேண்டாம். ஏனெனில் இதற்கென தனித்தனி கட்டணங்கள் உள்ளன. இவற்றில் பிராசசிங், விண்ணப்பம், சோதனையிடல், நிர்வாகம் மற்றும் வேறு பல கட்டணங்கள் அடங்கும். இதில் சில கட்டணங்களை நடப்பு மற்றும் புதிய வங்கிகள் இரண்டும் வசூலிக்கும். பேலன்ஸ் டிரான்ஸ்பர் செலவுகளை கணக்கிட்டு நீங்கள் புதிய குறைந்த வட்டி விகிதம் மூலம் குறிப்பிட்ட சேமிப்பை சாதிக்க முடியுமா என்று தீர்மானியுங்கள். இந்த டிரான்ஸ்பர் முறைக்கு என்ன செலவாகும் என்று கணக்கிட நீங்கள் வீட்டு கடன் டிரான்ஸ்பர் கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.
ரெப்போ-லிங்க்ட் கடன்:
ரெப்போ-லிங்க்ட் விகித கடன் (RLLR) என்பது மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் தொடர்புடையது. RBI ரெப்போ விகிதத்தை குறைத்தால் RLLR அடிப்படையில் கடன் தரும் நிறுவனங்கள் தங்களின் வட்டி விகிதத்தையும் குறைக்கின்றன. இதில் ரெப்போ விகித ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வங்கிகளின் வட்டி விகிதங்களும் வேறுபடும். இத்தகைய கடன்கள் கடன் பெறுபவர்களிடையே வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துகிறது ஏனெனில் RBI எப்போதெல்லாம் தனது விகிதத்தை குறைத்துக்கொள்கிறதோ அப்போதெல்லாம் பயனர்கள் நன்மையடைகின்றனர். ரெப்போ விகித குறைப்பு வீடு வாங்குபவர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது ஏனெனில் இது வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உங்கள் EMI சுமையை எளிதாக்குகிறது. எனவே மக்களுக்கு சிறிது நிவாரணம் வழங்க RBI சமீப காலங்களில் ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது வேறொரு நிறுவனத்திற்கு பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்யாமலேயே உங்கள் EMI குறையும்.
சட்ட திட்டங்களை கவனமாக படிக்கவும்:
நீங்கள் உங்கள் வீட்டு கடனை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றும்போது அவர்களின் சட்ட திட்டங்களை பற்றி உறுதியாக தெரிந்துக்கொள்ளுங்கள். குறைந்த வட்டி விகிதம் ஆர்வத்தை தூண்டினாலும் அந்த புதிய கடனுக்கான நிபந்தனைகளை நினைவில் கொள்ளுவதும் முக்கியம். எனவே வீட்டு கடனை டிரான்ஸ்பர் செய்வதன் பலாபலன் எந்த அளவில் இருக்கும் என்று அறிந்துக்கொள்ள சட்ட திட்டங்களை முழுதுமாக படியுங்கள்.
வீட்டு கடன் டிரான்ஸ்பரை நாடுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்துங்கள்:
- நடப்பு வங்கியுடன் பரிவர்த்தனையை முடித்து கொள்ளுங்கள்: பேலன்ஸ் டிரான்ஸ்பர் செயல்முறையை தொடங்குவதற்கு முன் நடப்பு நிறுவனத்திடமிருந்து உங்கள் எதிர்கால நிறுவனத்திற்கு எழுத்து மூலம் பேலன்ஸ் டிரான்ஸ்பர் ஒப்புதலை அனுப்ப கேளுங்கள். உறுதிபடுத்தப்பட்டவுடன் உங்களுக்கு தடையற்ற சான்றிதழும் (NOC) மீதமுள்ள கடன் தொகை விவரங்களை தாங்கிய அறிக்கையும் அனுப்பப்படும்.
- NOCயை புதிய நிறுவனத்திடம் சமர்ப்பியுங்கள்: NOCயை புதிய நிறுவனத்திடம் கொடுத்து கடன் தொகைக்கு ஒப்புதலை கோருங்கள்.
- டிரான்ஸ்பர் ஆவணங்கள்: பரிவர்த்தனை முழுமையடைந்தவுடன் உங்கள் சொத்து ஆவணங்கள் புதிய நிறுவனத்திற்கு சமர்பிக்கப்படுகின்றன. மீதமுள்ள முன்தேதியிட்ட காசோலைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் ஏதேனும் ஆவணம் மாற்றப்படாமலேயே இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த கட்டுரையை வாட்சப்பில் பகிரவும்.